திருவள்ளுவரின் திருக்குறள்

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.



குழப்பமும், வேண்டப்படாத வெறுப்பும், தேவையை சந்திக்கமுடியா வறுமையும், இல்லாத படையே வெல்லும்.



தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.



எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.



சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.


Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.


An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.



siRumaiyum sellaath thuniyum vaRumaiyum
illaayin vellum padai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உட்பிரிவுகளுடன் அஞ்சாத படை ஆள்பவரின் முதன்மையானது. நாகத்தின் ஒசை கேட்டு ஓடும் எலிக் கூட்டமாய் நடுக்க செய்யும் அஞ்சாத படை பழைமையானது. வாழைத்தார் போல் அடுக்கப்பட்ட படை எண்ணிக்கை குறைந்தாலும் வெற்றி பெறும். மன உறுதி உள்ள வீரர்கள் இருந்தும் வழிநடத்த சரியான ஆள் இல்லை என்றால் வெற்றி இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.