திருவள்ளுவரின் திருக்குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.



நிறைவான மொழி மனிதர்களின் பெருமையை, மண்ணில் மறைவான மொழி காட்டிவிடும்.



பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.



நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.



சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.


The might of men whose word is never vain,
The 'secret word' shall to the earth proclaim


The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world



NiRaimozhi maandhar perumai nilaththu
maRaimozhi kaatti vidum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

போதும் என்ற நிறைவை தரும் ஒழக்கத்துடன் வாழ்ந்து நிறைவடைந்தவர்களை விரும்பி அறிய துணிவு அவசியம். இறந்தவர்கள் எல்லாம் நிறைவானவர்கள் என்று எண்ணக்கூடாது. இரண்டால் ஆன உலகை புரிந்து கொள்ளவேண்டும். புலன்களை கட்டுப்பாட்டிற்க்குள் வைப்பதே சிறந்தது. அப்பொழுது, மனித ஆற்றல் முற்றிலும் உணரப்பட்டு இந்திரனைப்போல் வாழலாம். இத்தகைய பண்புள்ளவர்களே அரிய செயல்களை செய்வார்கள். புலன்கள் புலப்படுத்தும் சுவை, ஒளி,ஊறு,ஒசை,நாற்றம் என்ற ஐந்தால் இந்த உலகை அறிகிறோம். நிறைவானவர்கள் பெருமையை போற்றுவதே மறைநூல்கள்.நற்குணம் அடைந்தவர் கோபத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்வது இல்லை.அந்தனர் என்பவர் யாவரும் எல்லா உயிரும் இன்பற்று மகிழவே எண்ணுவார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.