திருவள்ளுவரின் திருக்குறள்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.



விரும்பியவர் நெருக்காததை சொல்லுவது போல் உள்ளது பசந்து பனிவாரும் கண்.



பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.



பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.



பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.


The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.


The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.



nayandhavar nalkaamai solluva poalum
pasandhu panivaarum kan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வறுமை போக்க வெளியூர் சென்றவரை எண்ணியபடி நறுமலரை கண்டு நாணுகிறது கண். நாடுபவர் நாடிவாராததை கண்டு கண்களில் பனி வருகிறது. மணமான நாட்களில் பருந்திருந்த தோள் அவர் பிரிவை உணர்த்தும்படி இளைத்திருக்கிறது. பிரிந்த கொடியவரின் கொடுமை உரைக்கிறது என் வளையல்கள். வளையலும் அதை அணிந்த தோள்களும் அவர் கொடியவர் என உரைக்க செய்தது. வாடிய தோள் கண்டு எழும் புசலால் நெஞ்சே பெருமைகொள். கூடி மகிழ்ந்த கைகள் தடவிய நெற்றியில் பசலை படர்ந்தது. காற்றும் புகாதபடி அணைத்து மகிழ்ந்த பெண்ணின் கண் இன்று பெரும் மழை உண்டாக்கியது. கண்ணில் பசப்பு கலைந்தது முன்பு கூடி மகிழ்ந்ததை நினைத்து.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.