திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இரவு / Mendicancy

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.



இன்பமாகும் ஒருவற்கு கேட்டுப் பெறுதல் கொடுத்தவற்கு துன்பம் தராதபடி.



இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.



நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.



வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.


Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive.


Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).



inpam oruvaRku iraththal irandhavai
thunpam uRaaa varin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொடுப்பவர் இடத்தில் கேட்டு பெற வேண்டும் தர மறுத்தால் அது அவரது பழிச்செயல் அல்லாமல் நம் குற்றம் ஆகாது. இன்பமும் அழகும் உடையது இல்லை என்பவர் இடம் கேட்டு பெறுவது. கேட்பதும் கொடுப்பதை போன்றது வெறுப்பை கனவிலும் காட்டாதவர். அவரால் பிறர் துன்பம் தொலையும். இழிவு செய்யாது கொடுப்பவரால் உள்ளம் மகிழும். கேட்பவற்கு கொடுக்க ஆள் இல்லை என்றால் மனிதன் மரப்பாவையாக மாறினான் என ஆகும். கொடுப்பவர் மதிப்பு கேட்பவரால் தீர்மானிக்கப்படுகிறது. கொடுக்கவில்லை என கோபமடைதல் குற்றம் மாறாக அதற்கு நம் வறுமையே காரணம் என உணர வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.