பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » எழுத்ததிகாரம்  » எழுத்தியல்  » இடைநிலை மயக்கம்

115.  க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு
ஆகும் இவ் இரு பால் மயக்கு உம் மொழி இடை
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்று ஏ

116.  ங முன் க ஆம் வ முன் ய ஏ

117.  ஞ ந முன் தம் இனம் யகரம் ஒடு ஆகும்

118.  ட ற முன் க ச ப மெய் உடன் மயங்கும்

119.  ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும்

120.  ம முன் ப ய வ மயங்கும் என்ப

121.  ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும்

122.  ல ள முன் க ச ப வ ய ஒன்றும் ஏ

123.  ர ழ அல்லன தம் முன் தாம் உடன் நிலையும்

124.  ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம
ஈர் ஒற்று ஆம் ர ழ தனி குறில் அணையா

125.  ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம்
நைந்து ஈர் ஒற்று ஆம் செய்யுள் உள் ஏ

126.  தம் பெயர் மொழியின் முதல் உம் மயக்கம் உம்
இ முறை மாறி உம் இயலும் என்ப