பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » பொதுப் பாயிரம்  » பாடம் கேட்டலின் வரலாறு

45.  கோடல் மரபு ஏ கூறும் காலை
பொழுது ஒடு சென்று வழிபடல் முனியான்
குணத்து ஒடு பழகி அவன் குறிப்பின் சார்ந்து
இரு என இருந்து சொல் என சொல்லி
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி
சித்திர பாவை இன் அ தகவு அடங்கி
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து
போ என போதல் என்மனார் புலவர்

46.  நூல் பயில் இயல்பு ஏ நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவர கேட்டல்
அ மாண்பு உடையோர் தம் ஒடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்ற இவை
கடன் ஆ கொளின் ஏ மடம் நனி இகக்கும்

47.  ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின்
பெருக நூல் இல் பிழைபாடு இலன் ஏ

48.  மு கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்

49.  ஆசான் உரைத்தது அமைவர கொளின் உம்
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்

50.  அ வினையாளர் ஒடு பயில் வகை ஒரு கால்
செவ்விதின் உரைப்ப அவ் இரு கால் உம்
மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்

51.  அழல் இன் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழல் இன் நீங்கான் நிறைந்த நெஞ்சம் ஓடு
எ திறத்து ஆசான் உவக்கும் அ திறம்
அறத்து இன் திரியா படர்ச்சி வழிபாடு ஏ