பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » பொதுப் பாயிரம்  » ஆசிரியனது வரலாறு

31.  குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சி உம்
உலகு இயல் அறிவு ஓடு உயர் குணம் இனைய உம்
அமைபவன் நூல் உரை ஆசிரியன் ஏ

32.  தெரிவு அரும் பெருமை உம் திண்மை உம் பொறை உம்
பருவ முயற்சி அளவு இல் பயத்தல் உம்
மருவிய நல் நில மாண்பு ஆகும் ஏ

33.  அளக்கல் ஆகா அளவு உம் பொருள் உம்
துளக்கல் ஆகா நிலை உம் தோற்றம் உம்
வறப்பின் உம் வளம் தரும் வண்மை உம் மலை கு ஏ

34.  ஐயம் தீர பொருள் ஐ உணர்த்தல் உம்
மெய் நடு நிலை உம் மிகும் நிறைகோல் கு ஏ

35.  மங்கலம் ஆகி இன்றி அமையாது
யாவர் உம் மகிழ்ந்து மேற்கொள மெல்கி
பொழுதின் முகம் மலர்வு உடையது பூ ஏ

36.  மொழி குணம் இன்மை உம் இழி குண இயல்பு உம்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடல் உம்
கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை
முட தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தை உம்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதல் ஏ

37.  பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்
செய்தி கழல் பெய் குடத்தின் சீர் ஏ

38.  தான் ஏ தர கொளின் அன்றி தன் பால்
மேவி கொள கொடா இடத்தது மடல் பனை

39.  அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர் கு
எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை

40.  பல் வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர் கு அளிக்குமது முட தெங்கு ஏ