பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » எழுத்ததிகாரம்  » உயிரிற்றுப் புணரியல்  » உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி

167.  இ ஈ ஐ வழி ய உம் ஏனை
உயிர் வழி வ உம் ஏ முன் இவ் இருமை உம்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்

168.  எகர வினா மு சுட்டின் முன்னர்
உயிர் உம் யகரம் உம் எய்தின் வ உம்
பிற வரின் அவை உம் தூக்கு இல் சுட்டு
நீளின் யகரம் உம் தோன்றுதல் நெறி ஏ

169.  உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்
ய வரின் இ ஆம் முற்று உம் அற்று ஒரோ வழி