பவணந்தி முனிவரின் நன்னூல்

156.  மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்கள் உம்
தன் ஒடு உம் பிறிது ஒடு உம் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு ஏ

157.  வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி
தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ

158.  விகாரம் அனைத்து உம் மேவலது இயல்பு ஏ

159.  தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று உம் மொழி மூ இடத்து உம் ஆகும்

160.  வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தல் உம் வரும் செய்யுள் வேண்டுழி

161.  ஒரு மொழி மூ வழி குறைதல் உம் அனைத்து ஏ

162.  ஒரு புணர் கு இரண்டு மூன்று உம் உற பெறும்

Meta Information:
புணர்ச்சி,உயிரிற்றுப் புணரியல்,எழுத்ததிகாரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்