பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » சொல்லதிகாரம்  » பொதுவியல்

357.  இரு திணை ஆண் பெண் உள் ஒன்றன் ஐ ஒழிக்கும்
பெயர் உம் வினை உம் குறிப்பின் ஆன் ஏ

358.  பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல்
ஆ ஓ ஆகல் உம் செய்யுள் உள் உரித்து ஏ

359.  உருபு உம் வினை உம் எதிர்மறுத்து உரைப்பின் உம்
திரியா தத்தம் ஈற்று உருபு இன் என்ப

360.  உருபு பல அடுக்கின் உம் வினை வேறு அடுக்கின் உம்
ஒரு தம் எச்சம் ஈறு உற முடியும்

361.  உருபு முற்று ஈர் எச்சம் கொள்ளும்
பெயர் வினை இடை பிற வரல் உம் ஆம் ஏற்பன

362.  எச்ச பெயர் வினை எய்தும் ஈற்றின் உம்

363.  ஒரு மொழி ஒழி தன் இனம் கொளல் கு உரித்து ஏ

364.  பொது பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல் வரும் சிறப்பு பெயர் வினை தாம் ஏ

365.  பெயர் வினை உம்மை சொல் பிரிப்பு என ஒழியிசை
எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பது உம்
குறிப்பு உம் தத்தம் எச்சம் கொள்ளும்