பவணந்தி முனிவரின் நன்னூல்

347.  தொழில் உம் காலம் உம் தோன்றி பால் வினை
ஒழிய நிற்பது வினையெச்சம் ஏ

348.  செய்து செய்பு செய்யா செய்யூ
செய்தென செய செயின் செய்யிய செய்யியர்
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற
ஐந்து ஒன்று ஆறு மு காலம் உம் முறை தரும்

349.  அவற்று உள்
முதல் இல் நான்கு உம் ஈற்று இல் மூன்று உம்
வினைமுதல் கொள்ளும் பிற உம் ஏற்கும் பிற

350.  சினை வினை சினை ஒடு உம் முதல் ஒடு உம் செறியும்

351.  சொல் திரியின் உம் பொருள் திரியா வினைக்குறை