பவணந்தி முனிவரின் நன்னூல்

146.  இலக்கியம் கண்டு அதன் கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றது ஐ
வினைப்பெயர் அல் பெயர் கு இடைநிலை எனல் ஏ

147.  த ட ற ஒற்று இன் ஏ ஐம் பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை

148.  ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம் பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை

149.  ப வ மூ இடத்து ஐம் பால் எதிர்பொழுது
இசை வினை இடைநிலை ஆம் இவை சில இல

150.  ற ஒடு உகர உம்மை நிகழ்பு அல்ல உம்
த ஒடு இறப்பு உம் எதிர்வு உம் ட ஒடு
கழிவு உம் க ஓடு எதிர்வு உம் மின் ஏவல்
வியங்கோள் இ மார் எதிர்வு உம் பாந்தம்
செலவு ஒடு வரவு உம் செய்யும் நிகழ்பு எதிர்வு உம்
எதிர்மறை மும்மை உம் ஏற்கும் ஈங்கு ஏ

Meta Information:
இடைநிலை,பதவியல்,எழுத்ததிகாரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்