பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » எழுத்ததிகாரம்  » உருபு புணரியல்

245.  ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு
உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ

246.  பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபு ஏ

247.  ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பு ஏ

248.  பதம் முன் விகுதி உம் பதம் உம் உருபு உம்
புணர் வழி ஒன்று உம் பல உம் சாரியை
வருதல் உம் தவிர்தல் உம் விகற்பம் உம் ஆகும்

249.  அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிற உம் பொது சாரியை ஏ

250.  எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்

251.  எல்லார் உம் எல்லீர் உம் என்பவற்று உம்மை
தள்ளி நிரல் ஏ தம் நும் சார
புல்லும் உருபின் பின்னர் உம் ஏ

252.  தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல

253.  ஆ மா கோ ன அணைய உம் பெறும் ஏ

254.  ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ

255.  வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ

256.  சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ

257.  அத்தின் அகரம் அகர முனை இல்லை

258.  இதன் கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை
நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ

259.  விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ

260.  இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம்
உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம்
விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம்
அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ

261.  புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன்
தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ
வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும்

262.  இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன்
வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ

Meta Information:
உருபு புணரியல்,எழுத்ததிகாரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்