பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » சொல்லதிகாரம்  » பெயரியல்  » சொற்பாகுபாடு

275.  அது ஏ
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்கு உம் ஆம் திசை வடசொல் அணுகா வழி

276.  செந்தமிழ் ஆகி திரியாது யார் கு உம்
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

277.  ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகி உம்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகி உம்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்

278.  செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தின் உம்
ஒன்பதிற்று இரண்டின் இல் தமிழ் ஒழி நிலத்தின் உம்
தம் குறிப்பின ஏ திசைச்சொல் என்ப

279.  பொது எழுத்து ஆன் உம் சிறப்பு எழுத்து ஆன் உம்
ஈர் எழுத்து ஆன் உம் இயைவன வடசொல்