பவணந்தி முனிவரின் நன்னூல்

163.  எண் மூ எழுத்து ஈற்று எ வகை மொழி கு உம்
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பு உம்
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி
மிகல் உம் ஆம் ண ள ன ல வழி ந திரியும்

164.  பொது பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய்
வலி வரின் இயல்பு ஆம் ஆவி ய ர முன்
வன்மை மிகா சில விகாரம் ஆம் உயர்திணை

165.  ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பு ஏ

166.  ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை
ஏவல் முன் வல்லினம் இயல்பு ஒடு விகற்பு ஏ