பவணந்தி முனிவரின் நன்னூல்

139.  தத்தம்
பகாப்பதங்கள் ஏ பகுதி ஆகும்

140.  செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ

141.  ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனைய உம் பண்பின் கு இயல்பு ஏ

142.  நட வா மடி சீ விடு கூ வே வை
நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின்
தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று
எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்ற உம்
செய் என் ஏவல் வினை பகாப்பதம் ஏ

143.  செய் என் வினை வழி வி பி தனி வரின்
செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல்

144.  விளம்பிய பகுதி வேறு ஆதல் உம் விதி ஏ