பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » எழுத்ததிகாரம்  » உயிரிற்றுப் புணரியல்  » உயிரீற்றுமுன் வல்லினம்

170.  இயல்பின் உம் விதியின் உம் நின்ற உயிர் முன்
க ச த ப மிகும் விதவாதன மன் ஏ

171.  மர பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வர பெறுன உம் உள வேற்றுமை வழி ஏ

172.  செய்யிய என்னும் வினையெச்சம் பல் வகை
பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபு ஏ
அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பு ஏ

173.  வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகல் உம் உரித்து அஃது ஏகின் உம் இயல்பு ஏ

174.  சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதல் உம் விதி

175.  பல சில எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின்
அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற

176.  அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா

177.  குறியதன் கீழ் ஆ குறுகல் உம் அதன் ஓடு
உகரம் ஏற்றல் உம் இயல்பு உம் ஆம் தூக்கின்

178.  அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு ஏ

179.  உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழி ஏ
யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரின் ஏ

180.  சுவை புளி முன் இன மென்மை உம் தோன்றும்

181.  அல்வழி இ ஐ முன்னர் ஆயின்
இயல்பு உம் மிகல் உம் விகற்பம் உம் ஆகும்

182.  ஆ முன் பகர ஈ அனைத்து உம் வர குறுகும்
மேலன அல்வழி இயல்பு ஆகும் ஏ

183.  ப ஈ நீ மீ முன்னர் அல்வழி
இயல்பு ஆம் வலி மெலி மிகல் உம் ஆம் மீ கு ஏ

184.  மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம்

185.  அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின்

186.  வன் தொடர் அல்லன முன் மிகா அல்வழி

187.  இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின்
மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை

188.  நெடில் ஓடு உயிர் தொடர் குற்றுகரங்கள் உள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிக ஏ

189.  மென் தொடர் மொழி உள் சில வேற்றுமை இல்
தம் இன வன் தொடர் ஆகா மன் ஏ

190.  ஐ ஈற்று உடை குற்றுகரம் உம் உள ஏ

191.  திசை ஒடு திசை உம் பிற உம் சேரின்
நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம்
றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற

192.  தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின்

193.  எண் நிறை அளவு உம் பிற உம் எய்தின்
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்

194.  ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வரும் ஏ

195.  மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது உம் ஆகும்

196.  நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ

197.  ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம்

198.  எட்டன் உடம்பு ண ஆகும் என்ப

199.  ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின்
முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு
தகரம் நிறீஇ பஃது அகற்றி ன ஐ
நிரல் ஏ ண ள ஆ திரிப்பது நெறி ஏ

200.  முதல் இரு நான்கு ஆம் எண் முனர் பத்தின்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதி உம் ஏற்கும் என்ப

201.  ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண் உம் அவை ஊர் பிற உம் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் த ஏ

202.  ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி
எண் நிறை அளவு உம் பிற வரின் பத்தின்
ஈற்று உயிர்மெய் கெடுத்து இன் உம் இற்று உம்
ஏற்பது ஏற்கும் ஒன்பது உம் இனைத்து ஏ

203.  இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப

204.  ஒன்பது ஒழித்த எண் ஒன்பது உம் இரட்டின்
முன்னதின் முன் அல ஓட உயிர் வரின்
வ உம் மெய் வரின் வந்தது உம் மிகல் நெறி

205.  பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்

206.  இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பு ஏ

207.  வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி
ஈற்று அழிவு ஓடு உம் அம் ஏற்ப உம் உள ஏ

208.  பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின்
ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம்
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை