பவணந்தி முனிவரின் நன்னூல்

328.  பொது இயல்பு ஆறு ஐ உம் தோற்றி பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பு இல முற்று ஏ

329.  ஒருவன் முதல் ஐந்து ஐ உம் படர்க்கை இடத்து உம்
ஒருமை பன்மை ஐ தன்மை முன்னிலையின் உம்
மு காலத்தின் உம் முரண முறை ஏ
மூ ஐந்து இரு மூன்று ஆறு ஆய் முற்று
வினைப்பதம் ஒன்று ஏ மூ ஒன்பான் ஆம்

330.  அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை

331.  அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை

332.  அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற
பல்லோர் படர்க்கை மார் வினை ஒடு முடிம் ஏ

333.  து று டு குற்றியலுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும்

334.  அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆ ஏ எதிர்மறை கண்ணது ஆகும்

335.  தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை

336.  கு டு து று என்னும் குன்றியலுகரம் ஓடு
அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற
இரு திணை மு கூற்று ஒருமைத்தன்மை

337.  அம் ஆம் என்பன முன்னிலையார் ஐ உம்
எம் ஏம் ஓம் இவை படர்க்கையார் ஐ உம்
உம் ஊர் க ட த ற இரு பாலார் ஐ உம்
தன் ஒடு படுக்கும் தன்மைப்பன்மை

338.  செய்கு என் ஒருமை உம் செய்கும் என் பன்மை உம்
வினை ஒடு முடியின் உம் விளம்பிய முற்று ஏ

339.  முன்னிலை கூடிய படர்க்கை உம் முன்னிலை

340.  ஐ ஆய் இகர ஈற்ற மூன்று உம்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்ற உம்
மு பால் ஒருமை முன்னிலை மொழி ஏ

341.  முன்னிலை முன்னர் ஈ உம் ஏ உம்
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வரும் ஏ

342.  இர் ஈர் ஈற்ற இரண்டு உம் இரு திணை
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல்

343.  க ய ஒடு ர ஒற்று ஈற்ற வியங்கோள்
இயலும் இடம் பால் எங்கு உம் என்ப

344.  வேறு இல்லை உண்டு ஐம் பால் மூ இடத்தன

Meta Information:
வினைமுற்று,வினையியல்,சொல்லதிகாரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்