பவணந்தி முனிவரின் நன்னூல்

133.  எழுத்து ஏ தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின்
பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப

134.  உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம்
க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டு ஓடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின

135.  பகாப்பதம் ஏழு உம் பகுபதம் ஒன்பது உம்
எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப

136.  பகுப்பு ஆல் பயன் அற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற
பெயர் வினை இடை உரி நான்கு உம் பகாப்பதம்

137.  பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதம் ஏ

138.  பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறின் உம் ஏற்பவை
முன்னி புணர்ப்ப முடியும் எ பதங்கள் உம்