பவணந்தி முனிவரின் நன்னூல்

280.  இடுகுறி காரணம் மரபு ஓடு ஆக்கம்
தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா
வேற்றுமை கு இடன் ஆய் திணை பால் இடத்து ஒன்று
ஏற்ப உம் பொது உம் ஆவன பெயர் ஏ

281.  அவற்று உள்
கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம்
ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு
இருது மதி நாள் ஆதி காலம்
தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு

அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி
சாதி குடி சிறப்பு ஆதி பல் குணம்
ஓதல் ஈதல் ஆதி பல் வினை
இவை அடை சுட்டு வினா பிற மற்று ஓடு
உற்ற ன ஈறு நம்பி ஆடூஉ

விடலை கோ வேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப

282.  கிளை முதல் ஆக கிளந்த பொருள்கள் உள்
ள ஒற்று இகர கு ஏற்ற ஈற்ற உம்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையல் ஓடு இன்னன பெண்பால் பெயர் ஏ

283.  கிளந்த கிளை முதல் உற்ற ர ஈற்ற உம்
கள் என் ஈற்றின் ஏற்ப உம் பிற உம்
பல்லோர் பெயரின் பகுதி ஆகும்

284.  வினா சுட்டு உடன் உம் வேறு உம் ஆம் பொருள்
ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம்
ஒன்று என் எண் இன்னன ஒன்றன் பெயர் ஏ

285.  முன்னர் அவ் ஒடு வரு வை அ உம்
சுட்டு இறு வ உம் கள் இறு மொழி உம்
ஒன்று அல் எண் உம் உள்ள இல்ல
பல்ல சில்ல உள இல பல சில
இன்ன உம் பலவின் பெயர் ஆகும் ஏ

286.  பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய

287.  முதற்பெயர் நான்கு உம் சினைப்பெயர் நான்கு உம்
சினைமுதற்பெயர் ஒரு நான்கு உம் முறை இரண்டு உம்
தன்மை நான்கு உம் முன்னிலை ஐந்து உம்
எல்லாம் தாம் தான் இன்னன பொது பெயர்

288.  ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆம் அ நான்மைகள் ஆண் பெண் முறைப்பெயர்

289.  அவற்று உள்
ஒன்று ஏ இரு திணை தன் பால் ஏற்கும்

290.  தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ
அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது

291.  வினையின் பெயர் ஏ படர்க்கை வினையாலணையும்பெயர்
ஏ யாண்டு உம் ஆகும்

292.  தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம்
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர்

293.  ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல

294.  ஒருவர் என்பது உயர் இரு பாற்று ஆய்
பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப

295.  பொருள் முதல் ஆறு ஓடு அளவை சொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதி உள்
ஒன்றன் பெயர் ஆன் அதன் கு இயை பிறிது ஐ
தொல் முறை உரைப்பன ஆகுபெயர் ஏ

296.  ஏற்கும் எ வகை பெயர் கு உம் ஈறு ஆய் பொருள்
வேற்றுமை செய்வன எட்டு ஏ வேற்றுமை

297.  பெயர் ஏ ஐ ஆல் கு இன் அது கண்
விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை

298.  ஆறன் உருபு உம் ஏற்கும் அ உருபு ஏ

299.  நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா

300.  அவற்று உள்
எழுவாய் உருபு திரிபு இல் பெயர் ஏ
வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலை ஏ

301.  இரண்டாவதன் உருபு ஐ ஏ அதன் பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்

302.  மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன் பொருள்

303.  நான்காவதன் கு உருபு ஆகும் கு ஏ
கொடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதன் கு இது எனல் பொருள் ஏ

304.  ஐந்தாவதன் உருபு இல் உம் இன் உம்
நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருள் ஏ

305.  ஆறன் ஒருமை கு அது உம் ஆது உம்
பன்மை கு அ உம் உருபு ஆம் பண்பு உறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்கம் ஆம் தற்கிழமை உம்
பிறிதின்கிழமை உம் பேணுதல் பொருள் ஏ

306.  ஏழன் உருபு கண் ஆதி ஆகும்
பொருள் முதல் ஆறு உம் ஓர் இரு கிழமையின்
இடன் ஆய் நிற்றல் இதன் பொருள் என்ப

307.  கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின்
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்
பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி
உள் அகம் புறம் இல் இட பொருள் உருபு ஏ

308.  எட்டன் உருபு ஏ எய்து பெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபு உம் ஆம் பொருள் படர்க்கையோர் ஐ
தன் முகம் ஆக தான் அழைப்பது ஏ

309.  இ உ ஊ ஓடு ஐ ஓ ன ள ர ல
ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்று ஒடு
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொது பெயர்
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன

310.  இ மு பெயர் கண் இயல்பு உம் ஏ உம்
இகர நீட்சி உம் உருபு ஆம் மன் ஏ

311.  ஐ இறு பொது பெயர் கு ஆய் உம் ஆ உம்
உருபு ஆம் அல்லவற்று ஆய் உம் ஆகும்

312.  ஒரு சார் ன ஈற்று உயர்திணை பெயர் கண்
அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதன் ஓடு
ஈறு போதல் அவற்று ஓடு ஓ உறல்
ஈறு அழிந்து ஓ உறல் இறுதி ய ஆதல்
அதன் ஓடு அயல் திரிந்து ஏ உறல் ஈறு அழிந்து
அயல் ஏ ஆதல் உம் விளி உருபு ஆகும்

313.  ளஃகான் உயர் பெயர் கு அளபு ஈறு அழிவு அயல்
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல்
அயல் இல் அகரம் ஏ ஆதல் உம் விளி தனு

314.  ர ஈற்று உயர் பெயர் கு அளபு எழல் ஈற்று அயல்
அகரம் இ ஈ ஆதல் ஆண்டை ஆ
ஈ ஆதல் அதன் ஓடு ஏ உறல் ஈற்று ஏ
மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல்
ஈற்றின் ஈர் உறல் இவை உம் ஈண்டு உருபு ஏ

315.  லகார ஈற்று உயர் பெயர் கு அளபு அயல் நீட்சி உம்

316.  ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர் கண்
இறுதி அழிவு அதன் ஓடு அயல் நீட்சி

317.  ல ள ஈற்று அஃறிணை பெயர் பொது பெயர் கண்
ஈற்று அயல் நீட்சி உம் உருபு ஆகும் ஏ

318.  அண்மையின் இயல்பு உம் ஈறு அழிவு உம் சேய்மையின்
அளபு உம் புலம்பின் ஓ உம் ஆகும்

319.  நு ஒடு வினா சுட்டு உற்ற ன ள ர
வை து தாம் தான் இன்னன விளியா

320.  முதல் ஐ ஐ உறின் சினை ஐ கண் உறும்
அது முதல் கு ஆயின் சினை கு ஐ ஆகும்

321.  முதல் இவை சினை இவை என வேறு உள இல
உரைப்போர் குறிப்பின அற்று ஏ பிண்டம் உம்

322.  யாதன் உருபின் கூறிற்று ஆயின் உம்
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்

323.  ஐ ஆன் கு செய்யுள் கு அ உம் ஆகும்
ஆகா அஃறிணை கு ஆன் அல்லாதன

324.  எல்லை இன் உம் அது உம் பெயர் கொளும்
அல்ல வினை கொளும் நான்கு ஏழ் இருமை உம்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்