பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » எழுத்ததிகாரம்  » மெய்யீற்று புணரியல்

209.  உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு ஏ

210.  தனி குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்

211.  தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம்
துன்னும் என்று துணிநர் உம் உளர் ஏ

212.  ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின்
உ உறும் ஏவல் உறா சில சில் வழி

213.  ந இறு தொழிற்பெயர் கு அ உம் ஆம் வேற்றுமை

214.  ண ன வல்லினம் வர ட ற உம் பிற வரின்
இயல்பு உம் ஆகும் வேற்றுமை கு அல்வழி கு
அனைத்து மெய் வரின் உம் இயல்பு ஆகும் ஏ

215.  குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடு ஏ

216.  சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பு ஆம் வேற்றுமை கு உணவு எண் சாண் பிற
ட ஆகல் உம் ஆம் அல்வழி உம் ஏ

217.  னஃகான் கிளைப்பெயர் இயல்பு உம் அஃகான்
அடைவு உம் ஆகும் வேற்றுமை பொருள் கு ஏ

218.  மீன் ற ஒடு பொரூஉம் வேற்றுமை வழி ஏ

219.  தேன் மொழி மெய் வரின் இயல்பு உம் மென்மை
மேவின் இறுதி அழிவு உம் வலி வரின்
ஈறு போய் வலி மெலி மிகல் உம் ஆம் இரு வழி

220.  மரம் அல் எகின் மொழி இயல்பு உம் அகரம்
மருவ வலி மெலி மிகல் உம் ஆகும்

221.  குயின் ஊன் வேற்றுமை கண் உம் இயல்பு ஏ

222.  மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அ ஏற்று மென்மை ஓடு உறழும்

223.  தன் என் என்பவற்று ஈற்று ன வன்மை ஓடு
உறழும் நின் ஈறு இயல்பு ஆம் உற ஏ

224.  ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம்
வன்மை கு இனம் ஆ திரிப உம் ஆகும்

225.  வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வு உம்
அல்வழி உயிர் இடை வரின் இயல்பு உம் உள

226.  நும் தம்
எம் நம் ஈறு ஆம் ம வரு ஞ ந ஏ

227.  அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும்

228.  ஈம் உம்
கம் உம் உரும் உம் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமை கு அ உம் பெறும் ஏ

229.  ய ர ழ முன்னர் க ச த ப அல்வழி
இயல்பு உம் மிகல் உம் ஆகும் வேற்றுமை
மிகல் உம் இனத்து ஓடு உறழ்தல் உம் விதி மேல்

230.  தமிழ் அ உற உம் பெறும் வேற்றுமை கு ஏ
தாழ் உம் கோல் வந்து உறுமேல் அற்று ஏ

231.  கீழின் முன் வன்மை விகற்பம் உம் ஆகும்

232.  ல ள வேற்றுமை இல் ற ட உம் அல்வழி
அவற்று ஓடு உறழ்வு உம் வலி வரின் ஆம் மெலி
மேவின் ன ண உம் இடை வரின் இயல்பு உம்
ஆகும் இரு வழி ஆன் உம் என்ப

233.  குறில் வழி ல ள த அணையின் ஆய்தம்
ஆக உம் பெறூஉம் அல்வழி ஆன் ஏ

234.  குறில் செறியா ல ள அல்வழி வந்த
தகரம் திரிந்த பின் கேடு உம் ஈர் இடத்து உம்
வரு ந திரிந்த பின் மாய்வு உம் வலி வரின்
இயல்பு உம் திரிபு உம் ஆவன உள பிற

235.  ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்து உம் உ உறா
வலி வரின் அல்வழி இயல்பு உம் ஆவன உள

236.  வல் ஏ தொழிற்பெயர் அற்று இரு வழி உம்
பலகை நாய் வரின் உம் வேற்றுமை கு அ உம் ஆம்

237.  நெல் உம் செல் உம் கொல் உம் சொல் உம்
அல்வழி ஆன் உம் றகரம் ஆகும்

238.  இல் என் இன்மை சொல் கு ஐ அடைய
வன்மை விகற்பம் உம் ஆகாரத்து ஒடு
வன்மை ஆகல் உம் இயல்பு உம் ஆகும்

239.  புள் உம் வள் உம் தொழிற்பெயர் உம் மானும்

240.  சுட்டு வகரம் மூ இனம் உற முறை ஏ
ஆய்தம் உம் மென்மை உம் இயல்பு உம் ஆகும்

241.  தெவ் என் மொழி ஏ தொழிற்பெயர் அற்று ஏ
ம வரின் வஃகான் ம உம் ஆகும்

242.  ன ல முன் ற ன உம் ண ள முன் ட ண உம்
ஆகும் த நக்கள் ஆயும்கால் ஏ

243.  உருபின் முடிபவை ஒக்கும் அ பொருளின் உம்

244.  இடை உரி வடசொலின் இயம்பிய கொளாத உம்
போலி உம் மரூஉ உம் பொருந்திய ஆற்றின் கு
இயைய புணர்த்தல் யாவர் கு உம் நெறி ஏ