பவணந்தி முனிவரின் நன்னூல்

345.  செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டு இல்
காலம் உம் செயல் உம் தோன்றி பால் ஒடு
செய்வது ஆதி அறு பொருட்பெயர் உம்
எஞ்ச நிற்பது பெயரெச்சம் ஏ

346.  செய்யும் என் எச்ச ஈற்று உயிர்மெய் சேறல் உம்
செய்யுள் உள் உம் உந்து ஆகல் உம் முற்றேல்
உயிர் உம் உயிர்மெய் உம் ஏகல் உம் உள ஏ