ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: உருபாதீதம்

கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு.


பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு.


உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு.


கறுப்பு வெளுப்பு சிவப்புறுபொன் பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு.


அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு.


நினைப்புமறப் பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.


குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு.


பிதற்றுமுணர் வையறுத் துப்பிர பஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.


பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.


ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு.



Meta Information:
உருபாதீதம், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural