TAGS:
அருள் பெறுதல் | வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள் , அவ்வைக்குறள் ,avvaikural,avvaikural chapter,athigaram,kural,english to tamil,section,tamil avvaikural,english couplets
ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அருள் பெறுதல்

அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.


இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.


வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.


ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம்.


உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னு மருள்பெற்றக் கால்.


எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லை யருள்பெற்றக் கால்.


சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.


மாசற்ற கொள்கை மதிபோலத் தான்றோன்றும்
ஈச னருள்பெற்றக் கால்.


ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான வொளி.


ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்.