ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: சிவயோக நிலை

அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல்.


உண்ணாடி வாயு வதனை யுடனிறப்பி
விண்ணோடு மெள்ள விடு.


மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து.


இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம் பத்தாறு புகும்.


கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான்.


முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி.


ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல்.


வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்றன் வாசலி லேற்று.


தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய்.


ஆதியா மூல மறிந்தஞ் செழுத்தினைப்
பேதியா தோது பிணை.



Meta Information:
சிவயோக நிலை , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural