ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்

கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.


வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.


செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.


வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.


வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.


இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.


அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.


கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல்.


திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்.


கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு.



Meta Information:
உயர்ஞான தரிசனம், தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural