ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அங்கிதாரணை

அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற்
பந்தப் பிறப்பறுக்க லாம்.


உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற்
கள்ள மலமறுக்க லாம்.


எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற்
கரியுங் கனலுருவ மாம்.


உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து.


உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி
லந்தி யழலுருவ மாம்.


ஐயைந்து மாய வகத்து ளெரிநோக்கிற்
பொய்யைந்தும் போகும் புறம்.


ஐம்பது மொன்று மழல்போலத் தானோக்கி
லும்ப ரொளியாய் விடும்.


தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறைமுடிக்க லாம்.


உள்ளத்தா லங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து.


ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு.



Meta Information:
அங்கிதாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural