ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்:  கண்ணாடி

கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி.


அஞ்சு புலனின் வழியறிந் தாற்பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு.


நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.


கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு.


சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு.


ஆர்க்குந் தெரியா வுருவந் தனைநோக்கில்
பார்க்கும் பரமா மவன்.


வண்ணமில் லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு.


நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு.


மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு.


சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.



Meta Information:
கண்ணாடி , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural