ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அமுததாரணை

அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம்.


ஈரெண் கலையி னிறைந்த வமிர்துண்ணில்
பூரண மாகும் பொலிந்து.


ஓங்கார மான கலசத் தமிர்துண்ணில்
போங்கால மில்லை புரிந்து.


ஆன கலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம்.


ஊறு மமிர்தத்தை யுண்டி யுறப்பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.


ஞான வொளிவிளக்கா னல்ல வமிர்துண்ணில்
ஆன சிவயோகி யாம்.


மேலை யமிர்தை விளங்காமற் றானுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம்.


காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து.


எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம்.


நிலாமண்ட பத்தினி றைந்தவமிர் துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்.



Meta Information:
அமுததாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural