ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்
அதிகாரம்: மெய்நெறி

செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.


பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.


இமைப்பிற் பரந்தங் கொடுங்குமின் போல
நமக்குட் சிவன்செயல் நாடு.


குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.


காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு.


மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்.


எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.


அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.


அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக யுணர்.


அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி.



Meta Information:
மெய்நெறி, தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural