ஔவையாரின் ஞானக்குறள்

நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணையா னாகு முடம்பு.


உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்.


புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு.


அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டும் உடம்பு.


ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.


அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு.


தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை யுடம்பு.


தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு.


ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு.


பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு.



Meta Information:
சூனிய காலமறிதல் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural