ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: நாடி தாரணை

எழுபத் தீராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்.


நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.


உந்தி முதலா யுறுமுடி கீழ்மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.


காலொடு கையி னடுவிடத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து.


ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு.


மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.


உந்தி முதலாகி யோங்காரத் துட்பொருளாய்
நின்றது நாடி நிலை.


நாடிக ளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து.


நாடி வழக்க மறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு.


அறிந்தடங்கி நிற்குமந் நாடிக டோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.



Meta Information:
நாடி தாரணை , வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural