ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: வாயுதாரணை

மூலத்திற் றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.


இடைபிங் கலைகளி ரேசக மாற்றி
லடையு மரனா ரருள்.


அங்குலியான் மூடி முறையா லிரேசிக்கிற்
பொங்குமாம் பூரகத்தி னுள்.


எண்ணிலி யூழி யுடம்பா யிரேசிக்கி
லுண்ணிலமை பெற்ற துணர்வு.


மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்ற வாயு
வுயிர்ப்பின்றி யுள்ளே பதி.


இரேசிப் பதுபோலப் பூரித்து நிற்கிற்
றராசுமுனை நாக்கதுவே யாம்.


கும்பகத்தி னுள்ளே குறித்தரனைத் தானோக்கிற்
றும்பிபோ னிற்குந் தொடர்ந்து.


இரேச கபூரக கும்பக மாற்றிற்
றராசு போனிற்குந் தலை.


வாயு வழக்க மறிந்து செறிந்தடங்கி
லாயுட் பெருக்கமுண் டாம்.


போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந்
தாழ்கின்ற வாயு வடக்கு.



Meta Information:
வாயுதாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural