ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.


சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.


வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.


மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.


குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.


சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம்.


தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.


ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை.


அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.


இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார்.



Meta Information:
ஞானம் பிரியாமை , தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural