ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: உள்ளுணர்வு

எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.


பல்லூழிக் காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.


எண்ணற் கரிய வருந்தவத் தாலன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.


முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.


காயக் கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல்.


பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல்.


பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின்.


ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.


ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.


காடு மலையுங் கருதித் தவஞ்செய்தால்
கூடு முணர்வின் பயன்.



Meta Information:
உள்ளுணர்வு, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural