ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: மெய்யகம்

மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி.


கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு.


உண்டு பசிதீர்ந்தார் போலுடம் பெல்லாஅங்
கண்டுகொள் காதல் மிகும்.


உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன்.


தோன்றாத தூயவொளி தோன்றியக் காலுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு.


வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்.


கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி.


ஆநந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு.


மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம்.


விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி.



Meta Information:
மெய்யகம் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural