இராமாயணத்தில் இலங்கையில் இருந்த சீதையை மீட்டு வரும் பொழுது, இராமன் சீதையிடம் நெருப்பில் இறங்கி சுத்த தன்மையை நிருபித்த பின் வா என்கிறான். சீதையும் அதே போல் நெருப்பில் இறங்கி பின் உயிரோடு வருகிறாள். சீதையும் இராமனும் சேர்கிறார்கள். இராமாயணத்தில் இந்த கதை உண்மையா?.
தத்துவத்தின் படி நாம் தொடர்ந்து தவம் செய்யும் பொழுது சிறு நெருப்பு வளர ஆரம்பிக்கும். நம் மனம் சுத்தம் ஆகும் பொழுது நெருப்பும் அதிகமாக வளரும். நாம் அதி சுத்தமாக மாறும்பொழுது நெருப்பிலிருந்து சீதை தோன்றி பின் இராமனிடம் சேருவாள். இது உண்மை, சிறந்த தவம் செய்வோருக்கு நடக்கும் சூட்சும நிகழ்வு.
நம்மை சீதையாக நினைத்து கொண்டால் சரியான தத்துவம் வரும். மனம் சுத்தமாகவும் அதே சமயம் கூர்மையாக மாறிகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் மனதில் எண்ணமற்ற தன்மை ஏற்படும். அச்சமயத்தில் பெரிதாக தென்பட்ட மனம் சுருங்கி வெடித்து நெருப்பு ஒளி அயனியாக்கம் போன்ற நிகழ்வுகளால் அணுக்கள் வடிவத்தை எடுத்து அன்பு என்ற இராமனிடம் சேர்கிறோம். நாம் நெருப்பில் குளித்த பின்பு இராமனிடம் சேர்கிறோம்.
நமது பாரத தேசத்தில் கம்ப இராமாயணம், வால்மிகி இராமாயணம் போல பல விதமாக இராமாயண கதைகள் உள்ளது. தத்துவம் தெரிந்தால் நாமும் புது இராமாயண கதைகளை எழுத முடியும்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். நன்றி ~ சசிகுமார் சின்னராஜு
