சிவன் கோவிலில் திருவண்ணாமலை ஒரு முக்கிய இடமாக கருதப்படுகிறது. பஞ்சபூத தத்துவங்களில் திருவண்ணாமலை நெருப்புக்குரிய கோயிலாக வழிபடுகிறோம்.

திருவண்ணாமலை என்பது திரு அண்ணாமலை என்று பிரிக்கலாம். அண்ணாமலை என்பது அண்ணாக்கு மேலே புருவத்து மத்தியில் காதுக்கு இடையில் தோன்றும் ஜோதியே திரு அண்ணாமலை என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். திரு அண்ணாமலையை பார்த்துவிட்டால் உண்ணாமலை தோன்றும்.

உண்ணாமலை என்பது அதுவும் ஒரு தெய்வத்தை சார்ந்தது. திருவண்ணாமலை ஜோதி பார்த்தவுடன் உண்ணாமலையில் உண்ணா முலையில் நமக்கு அன்பு தோன்றியுடன் ஜீவ அமிர்தங்கள் சுரக்கும்.
மனதை வசப்படுத்தினால் உடல் மறைந்து மனம் வசமாகி குறுகி அணு வடிவத்திற்கு செல்லும். அணு வடிவத்திற்கு சென்றவுடன், நாதத்தைக் கொண்டு அணுவை பார்த்துக் கொண்டு இருந்தால் அக்னி உருவாகி அன்பில் கலக்கும். அன்பினால் நாம் பேரின்பக் கடலில் மிதப்போம் அதுவே முக்தியாக கருதப்படுகிறது
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். நன்றி
~சசிகுமார் சின்னராஜு.
