ஆடையும் இயற்கையும்

இயற்கையின் வெளிப்பாடாகிய குளிர், வெப்பம், மழை, காற்று மற்றும் பனி போன்ற காலங்களில் உடலை பாதுகாக்க தான் உடை அணியப்பட்டது. தொழிற்புரட்சி காரணமாக தீ, கதிர்வீச்சு, குண்டு மற்றும் ஆயுதங்களால் தாக்கப்படாமல் இருப்பதற்க்காகவும் சிறப்பு உடை அணியப்படுகின்றது. ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்புகளுக்கு தேவையான உடை அணியப்படுகிறது. பல்வறு சமுகத்தினர் அவர்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் அல்லது தயாரிக்கும் நூல்களை கொண்டு தயாரிப்பதால் அந்த மக்கள் / சாதி / கூட்டமானவர்களை தனித்துவப்படுத்துகிறது. அதுவே நாளடைவில் உடல் பாகங்களை மறைப்பதற்க்கும், பெரியவர்கள், உயர்ந்தவர்கள் போன்று தன்னை உயர்த்தி காட்டுவதற்க்கும் பயண்பட்டது. நாகரீக மனிதர்கள் என்று நம்மை காட்டும் பொழுது மற்ற மக்களுக்காக பல்வேறு வகையான உடை அணியப்படுகின்றது. அப்படி அணியும் பொழுது இயற்கையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவைப்படாத நேரத்தில் உடை அணிவதால் பல்வேறு சமுக சூழ்நிலைகள் கெடுகின்றது.

சமுகத்தில் எல்லோரும் விவசாய நிலத்திற்க்கு சொந்தமில்லை. ஆதலால் பிழைப்புக்காக உடை தயாரிக்கபடுகின்றது. அப்படி தயாரிக்கபட்ட உடையை எப்படியெல்லாம் விற்க முடியும் என்று சிந்தனை வளருகிறது. நாளடைவில் தயாரிக்கும் உடையை மக்களுக்கு பல வகையில் பழக்க படுத்துகிறார்கள். நடிகைகள், நடிகர்கள் , நாடக கலைஞர்கள், அழகான பெண்களையும் ஆண்களையும் வைத்து உடைகளை பிரபலப்படுத்தும் பொழுது அவர்களால் வசிகரிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அது போன்று அனிய வேண்டும் என்ற சிந்தனை வளருகிறது. அந்த சிந்தனை பழக்கமாக மாறும் பொழுது குறிப்பிட்ட உடையில்லாமல் வாழமுடியாது என்ற சிந்தனையும் பற்றுகிறது.

சிறுவயதில் ஆடை இருந்தாலும் இல்லை என்றாலும் உணர்ச்சி வசப்படுவதில்லை. அதுவே வளர வளர கூச்சம், வெட்கம் போன்ற சுபாவங்களால் தங்களுடைய உடல் பாகங்களை மறைப்பதற்க்கு முயல்கின்றனர். நாட்கள் செல்ல செல்ல ஆடை பழக்கத்திற்க்கு வருவதால், கழிவுகளை வெளியேற்றும் சூழ்நிலை வந்தால் அப்பொழுது யாராவது பார்த்து விடுவார்களா என்ற எண்ணமும் உதிக்க ஆரம்பிக்கிறது. அப்படிபட்ட எண்ணங்களால் கழிவுகளை அடக்கி உடலுக்கு உபாதைகள் ஏற்படுத்திகொள்கிறோம். உடல் பாகங்களை ஆடைகளால் மறைப்பதால் எதிர்பாலிணத்திற்க்கு உடல் பாகம் மீது மோகம் என்ற தீ பரவுகிறது. இந்த மோகம் பல தீமைகளுக்கும் வித்திடுகிறது. ஆடை பழக்கத்தால் கூச்சம்/ வெட்கம் இல்லாமல் போவதால் பல இடங்களுக்கு செல்ல வாய்ப்பு அதிகம். ஆதலால் போக்குவரத்து ஏற்படுவதால் இயற்கை வெகுவாக அழிய ஆரம்பிக்கிறது.

ஆடை தயாரிப்பிற்க்கு மிக முக்கியமான மூலப்பொருள் பஞ்சு மற்றும் பட்டு நூல். உணவு பயிர்களினால் வரும் வருமானத்தை விட பஞ்சு, பட்டு நூல்களால் வரும் வருமானம் அதிகம். இதனால் உணவு பயர்களை பயிரிடுவதற்க்கு பதில் பஞ்சு, பட்டு பூச்சிகளுக்கான பயிர்களை பயிரிடப்படுகிறது. உணவு தயாரிப்பு குறைவதால் விற்க்கும் உணவுகளின் விலை கூடுதலாக இருக்கும். உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. பஞ்சு, பட்டுகுச்சிகளை வளர்க்கும் பொழுது நோய் தாக்காமல் இருப்பதற்க்கு பல்வேறுவிதமான மருந்து அடித்து பயிர்களை பாதுகாக்கபடுகிறது. இதனால் பல்வேறு உயிரமைப்புகள் பாதிக்கபடுகிறது. நாட்கள் செல்ல செல்ல நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் போகிறது.

பஞ்சு, பட்டு கூண்டுகளுக்கு என்ன வண்ணம் இருக்கோ அந்த வண்ணத்தோடு ஆடைகளை வடிவமைத்தால் இயற்கை பாதுகாக்கபடும். ஆனால் இன்று ஆடைகளை மக்கள் விரும்பும் வன்னம் பல்வேறு வண்ணங்களோடு பல விதமான இரசாயணங்கள் கலந்து வடிவமைக்கபடுகிறது. இந்த இரசாயணங்கள் தொழிற்ச்சாலையிலிருந்து வெளியே வரும்பொழுது சுத்தம் செய்யபடுவதாக சொல்லபடுகிறது. அப்படி சுத்தம் செய்யப்பட்ட நீரை சமையலுக்கோ அல்லது குடிக்க பயண்படுத்த முடியுமா என்றால் இல்லை. வெளியே வரும் இரசாயண கழிவுகள் ஆற்றில் கலக்கபடுகிறது. அப்படி கலக்கும் பொழுது நுண்ணுயிர்கள் பாதிக்கப்பட்டு நிலத்தில் படிவங்களாக படிகிறது. ஆறும் வற்றி விட்டால் இரசாயண கழிவுகளை என்ன செய்கிறார்கள் தெரியுமா, ஆள்துனைகிணறு அமைத்து அதில் இரசாயாண கழிவுகளை விட்டு மூடிவிடுகிறார்கள். ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் தற்பொழுது நடைமுறை செய்யபடுகிறது. இதன் காரனமாக நுண்ணுயிர்கள் பாதிக்கபடுவதால் நிலத்திற்க்கு காற்றோட்டம் குறைந்து நிலம் சூடாகிறது. இதனால் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் போகிறது. பின்பு குடிக்கும் தண்ணீரும் கெடுகிறது.

ஒரு 200 லிட்டர் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கிறோம். பின்பு அதை ஒருவாரம் ஏதும் பயண்படுத்தாமல் அப்படியே விடுகிறோம். ஒரு வாரம் கழித்து பார்த்தால் தண்ணீர் கலங்களாகவும் துர்நாற்றமும் வீசும். அதில் வளர்ந்த உயிர்கள் மனித உடலுக்கு கெடுக்கும் தன்மையை தருகிறது. அப்படிபட்ட தண்ணீரில் மீன்களையோ அல்லது தவளையோ விட்டால் அந்த நுண்ணுயிர்களை சாப்பிட்டு தண்ணீரீன் துர்நற்றம் கலைந்து தண்ணீர் சுத்தமாக மாறிவிடும். ஒருவேளை இப்படி பட்ட நீரில் இரசாயணம் கலந்தால் நல்ல நுண்ணுயிர்கள் வாழமுடியாமல் இறந்து பலவிதமான இயற்கை பாதிப்புகள் ஏற்படும். அதுபோல தான் ஆற்றிலும் நிலத்திலும் கலக்கும் இரசாயனமும்.

இன்று மக்கள் தொகை அதிகமாகிகொண்டே போவதால், அவர்களுக்கு தகுந்த வாறு உடைகளும் தயாரிக்கபடுகிறது. அதுவுமில்லாமல் வெளிமாநிலத்திற்க்கும், வெளிநாட்டிற்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒருவேலை திருப்பூர் போன்ற இடங்களில் ஒட்டுமொத்தமாக தயாரிக்கும் பொழுது அந்த இடத்தில் பல்வேறு விதமான சுழற்ச்சி முறை பாதிக்கப்பட்டு விரைவில் வாழத்தகுதில்லாத இடமாக மாறும். என்ன தான் வருமானம் இருந்தாலும் பலவிதமான நோய்கள் அங்கு வாழும் மக்களை தாக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கே பாதிப்பு நிகழும். ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் ஆடை தயாரிப்பதை குறைத்தால் நிலம் பாதுகாக்கபடலாம்.

தேவைக்காக அணிந்த உடைகள் ஆடம்பரமாக மாறும் பொழுது இயற்கை கட்டாயம் அழிய ஆரம்பிக்கும். அதனால் பல்வேறு சமுக சிக்கல்கள் தலைதூக்க ஆரம்பித்து தற்பொழுது வாழும் இடத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆடம்பரமான ஆடை பழக்கங்களை குறைத்தால் இயற்கை பாதுகாக்கபடும். ஆடம்பரமான உடை அணியும் ஒவ்வொருவர் மீது வரி வசூல் செய்தால் உடை அணியும் பழக்க குறைந்து இயற்கை பாதுகாக்கபடும். மிருகங்கள் குளிர், வெப்பம், காற்று மற்றும் பனியை எப்படி தாங்குகிறது என்று ஆராயிந்து அதை மக்களுக்கு எடுத்துசொல்லி ஆடை பழக்கத்தை குறைக்க வேண்டும். மிக வேகமாக அதிகமான ஆடை தயாரிப்பதற்க்கு மின்சாரம் தேவைபடுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சாரம் பயண்படுத்தும் ஒவ்வொருவர் மீதும் அதிகமான வரியை விதித்தால் ஆடை தயாரிப்பு குறையும். மனித தேவைக்காக இயற்கையை அழிக்கும் ஒவ்வொறு நிறுவணங்கள் மீது பல விதமான வரியை வசூல் செய்தால் தானாகவே உடை அணியும் பழக்கம் குறையும்.

பெண்களுக்கு ஆண்களுக்கு என்று தணித்துவமான உடைகளை தயாரிக்கமால் எல்லோருக்கும் ஒரே விதமான ஆடைகளை தயாரித்தால் ஆடைமீதான மோகம் குறைந்து விடும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களுடைய உடல் பாகங்களால் கூச்சம் வருவதை சிறுவயதிலே நிர்வானப்படுத்தி கூச்சத்தை கிள்ளி எறிய வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் குற்றம் புரிந்தால் நிர்வாணத்தை தண்டனையாக கொடுக்க வேண்டும். இதனாலும் கூச்சம் குறைக்கப்பட்டு தேவையில்லாத உடை அணியும் பழக்கம் குறைந்து விடும். ஆடைகளை விளம்பரபடுத்தும் நடிகை நடிகர்கள் வீட்டீலும் நாட்டிலும் கூச்சமெ இல்லாமல் நிர்வானமாக உளா வருகிறார்கள். ஆனால் அந்த விளம்பரத்தை பார்க்கும் நாம் குளிக்கும் பொழுது கூட ஆடையை துறப்பதில்லை. வெப்ப சூழ்நிலையான நாடுகளில் ஆடை பழக்கம் மிகவும் குறைவு. ஆனால் நம் நாட்டிலோ தூங்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும் உடை அணிகிறோம். மற்ற நாடுகளில் உள்ளது போல் கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் நிர்வானத்தை ஊக்கப்படுத்த வேண்டும். சமுக அக்கறை கொண்ட படத்தயாரிப்பாளர்கள் உடை மீது வெறுப்பு வரும் அளவுக்கு படத்தை தயார் செய்து மக்கள் மத்தியில் பிரபல படுத்த வேண்டும். நிர்வானமாக அல்லது அரை நிர்வானமாக வாழும் மக்களுக்கு அவர்கள் வாழும் ஊரில் செழிப்பான வசதி செய்து கொடுத்து பல ஊரில் சென்று வியாபார சந்தையை அரை நிர்வானத்துடன் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு அரசாங்கம் மிகப்பெரிய பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். வெளிநாட்டிற்க்கும் வெளிமாநிலங்களுக்கும் ஜவுளி அல்லது ஆடையை ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும்.

பலவிதமான அறிவியல் கண்டுபிடிப்பால் நாடு வளர்ச்சி அடைந்து மக்களாகிய நாம் செழிப்பாக வாழ்ந்தோம். செழிப்பாக வாழ இயற்கையை அழிக்காமல் இருந்தால் நல்லது. ஆனால் இன்று இயற்கைக்கு எதிர்மாறாக நாம் வாழும்பொழுது பல விதமாக இயற்கை பாதிப்புகளால் நாம் இருக்கும் இடங்களில் வாழ முடியாமல் போகும். அநாவசியமான தேவையில்லாத பல பழக்கத்தை குறைப்பது தற்பொழுது தேவையாக உள்ளது. ஆடம்பரமான ஆடை பழக்கத்தை குறைப்போம், இயற்கையை பாதுகாப்போம். மாற்றம் தேவைபடுகிறது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *