தமிழ்நாட்டிற்க்கு தற்காப்பு அவசியம்

தமிழ்நாட்டின் அரசியலையும் இயற்கையும் அலசுவோம்.

சமைத்து சாப்பிட்டால் தான் உயிர் வாழமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதில் உள்ளது. நாம் எரிவாய்வு(கேஷ்), மண்ணெண்னெய்க்கு அடிமையானாதால் வெளிநாட்டு வியாபாரிகள் நம்மை கட்டுப்படுத்துகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் நாம் வேறு ஏதாவது பொருளை அந்நாட்டிற்க்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை நாம் ஏற்றுமதி செய்வதற்க்கு பொருள் இல்லை என்றால் என்னாகும். நம் நாடு அவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும். அவர்கள் சொல்வது தான் நடக்கும். நீங்கள் என்ன போராட்டம்
செய்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. செவிடன் காதில் சங்கு ஊதுன கதை தான். அவன் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் இங்கிருந்து எடுத்து சென்று விடுவான். அதை தடுக்க வேறெதெனும் வழி இருக்க என்று அலசுவோம்.

ஒரு கிராமத்திற்க்கோ அல்லது வசிக்கும் பகுதியில் குறிப்பிட்ட மக்களுக்கோ ஒதுக்குபுறமான இடத்தில் தேவையான பொது கழிவறையை ஏற்படுத்தி பயோ கேஸ்(Bio Gas) உற்பத்தி செய்வதால் குறிபிட்ட அளவு கேஸ் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். விவசாய மக்கள் மாடு வளர்ப்பதால் அதில் வரும் சானம் கொண்டு கேஸ் தயாரிக்கலாம். சூரிய ஒலி, காற்றாடி, கடல் அலையை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தால் கேஸ் இறக்குமதியை குறைத்துக்கொள்ளலாம். டிராக்டர் கொண்டு உழுவதால் மண்ணெண்ணெய் தேவைபடுகிறது, பாரம்பரியமாக மாடு பூட்டி ஏர் உழுவதால் பல நபர்களுக்கு வேலையும் ஏற்படுத்தலாம், மண்ணெண்ணெய் தேவையும் குறைகிறது.

சமைத்து சாப்பிடுவதற்க்கு மண்ணெண்ணெய், கேஸ் தேவைபடுகிறது. சமைக்காமல் சாப்பிட்டால் அதாவது சில பாரம்பரிய இயற்கை உணவுமுறையை கையாண்டால் கேஸ் இறக்குமதி அவசியமில்லை அல்லது குறைத்துக்கொள்ளலாம். இயற்கை உணவுமுறைகளை கொஞ்சம் கற்று நம் மக்களை பாதுகாப்போம்.

புளியை தண்ணீரில் கரைத்து வெல்லம் அல்லது இனிப்பு கலந்து மற்றும் காரத்தன்மைக்கு சுக்குபொடி ஒரு சிட்டிகை கலந்து பானம் தயாரித்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். புளி தமிழ்நாட்டில் எளிதாக கிடைக்க கூடிய ஒரு உணவு. அதை சாப்பிடக்கூடாது என்று வாதம் செய்வார்கள் பலர். முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
புளியை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி ஆரஞ்சு பழம், எழுமிச்சைப்பழம், சாத்துக்கொடி போன்ற என்னெற்ற உணவு முறைகளை சொல்வார்கள். இதிலும் புளிப்பு தானே இருக்கிறது.
புளியம்பழத்தில் கொஞ்சமாகத்தான் சக்தி இருக்கிறது, ஆரஞ்சு பழத்தில் நிறைய சக்தி இருக்கிறது என்று பொய்யுரைப்பார்கள். இந்த பொய்யை நிருபிக்க புது பல்கலை கழங்களையை (University) நிறுவி அதிலிருந்து எடுத்துரைப்பார்கள். அப்படி நம்பவில்லை என்றால் பாரம்பரிய அல்லது பெருமைப்படக்கூடிய பல்கலைகழங்களை மிரட்டி கருத்துகளை புகுத்தி எடுத்துரைப்பார்கள். நாமும் நம்பிக்கொண்டோம்.

இங்கிருக்கும் புளியை சரியில்லை என்றும் புளி விழையாத அல்லது இல்லாத இடத்தில் நிறைய சத்துக்கள் இருக்கிறது என்றும் சொல்லி வியாபாரம் செய்வார்கள். வியாபாரத்தந்திரம் இது. அரிசியை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்றும் கோதுமை சாப்பிட்டால் நல்லதுன்னு சொல்கிற மருத்துவர் உலகம் தானே இது. ஏமாற்றிப்பிழைக்க கற்றுக்கொண்டார்கள், நாமும் நம்பிவிட்டோம்.

எந்த ஒரு சுவையும் அதிகமாக இருந்தால் திகட்டிவிடும். அது பகலா இருந்தாலும் இரவாக இருந்தாலும். எட்டிக்கசப்பு மரணத்தை கொடுக்கிறது. அதே போலத்தான் வாசனையும். சுவையை நேரத்திற்க்கும் தங்கள் உடலிற்க்கும் தகுந்தார் போல குறைத்தும் கூட்டியும் பயண்படுத்துங்கள். அவ்வளவு தான் உணவு. சுவையும் வாசனையும் அதிகமாக இருந்தால் திகட்டி விடும். முக்கியமாக இரவு நேரத்தில் சுவையும் வாசனையும் அதிகம் இருக்க கூடாது. சூரியன் மறைந்த பின் உணவுகள் எடுப்பது தவிற்க்க வேண்டும். மாலை நேரத்தில் கடுக்காய் சாப்பிட சொல்வார்கள், கடுக்காய் கொடுத்துட்டான் என்றால் என்னை ஏமாற்றி விட்டான் என்று பொருள், மாலை நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் உங்கள் வயிற்றை ஏமாற்ற வேண்டும். பல வியாதி வர முக்கியமான காரணம் இரவு உணவு எடுப்பதே.

புளியை கண்டு நாம் இப்பொழுது அஞ்சுகிறோம் ஏனென்றால் வியாதி வந்தால் மருத்துவர் சொல்வது புளியை சேர்க்காதிர்கள் என்று. அவர்கள் மட்டுமா! ஆன்மீக சாமியார்கள் பலர் புளியை சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல என்று பரப்புரை செய்கின்றனர். புளித்த உணவு என்றால் கெட்டுப்போன உணவு. புளித்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் பரவாயில்லை, புளியை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றது தான் துரோகம்.

அரிசிக்கு பதில் அவலை பயன்படுத்தலாம்.

தேங்காய் மற்றும் வெல்லம் அல்லது பனவெல்லம் கலந்து சாப்பிடலாம். கூடவே வாழைப்பழத்தை கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

அவலை(Rice Flakes) ஊறவைத்து தேங்காய், வெல்லம், வாழைப்பழம் கலந்து சாப்பிடலாம். அதே ஊறவைத்த அவலுடன் காரம், பச்சை வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை கலந்து சாப்பிடலாம்.

கறந்த மாட்டுப்பாலுடன் வீட்டிலிருக்கும் புளியுடனோ அல்லது மரத்திலிருந்து பறித்து ஓடுடன் பாதியாக உடைத்து பாலில் கலந்து வைத்துவிட்டால் தயிராக மாறிவிடும். பாலை கொதிக்க வைக்க தேவையில்லை. இந்த மாறி மாடு மேய்கிறவர்கள் செய்வார்கள். மாட்டுப்பாலுக்கு பதில் நிலக்கடலை, பாசிப்பயாறை ஊறவைத்து அரைத்து பாலை பிரித்து சாப்பிடலாம். அரிசியிலும் பால் தயாரிக்கலாம் என்று படித்துள்ளேன். அரிசியை எட்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு அலசாமல் தண்ணீரை வடிகட்டி விட்டு புது தண்ணீர் கலந்து அரைத்து பின் பருத்தி துணியில் வடிகட்டி பாலாக மாற்றலாம். செய்து சாப்பிட்டு பாருங்கள். உயிர் போயிடுமா என்ன?

நிலக்கடலை(GroundNut), கொண்டைக்கடலை, பாசிப்பயாறு, கம்பு, கொள்ளு போன்ற தானியங்களை ஊறவைத்து முளைக்கட்டி சாப்பிடலாம்.

இளம் வென்பூசனியை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம்.

தேங்காய் சட்னி, புளி, தக்காளி, புதினா, வெங்காயம் சட்னி, புளி ரசம், மாங்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, இளம்புளி சட்னி போன்ற உணவுகளை சமைக்காமல் சாப்பிடலாம்.

மாங்காய், நெல்லிக்காய், எழுமிச்சை, புளி, நார்த்தங்காய், விதையில்லாத இளம் முருங்கைக்காய் ஊர்காய் செய்து சாப்பிடலாம். காட்டு நெல்லியை வத்தல் செய்து தேவைபடும்பொழுது ஊறவைத்து சாப்பிடலாம்.

கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை சாப்பிடலாம். தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமில்லி, கருவேப்பிலை, உப்பு மற்றும் மிளகு கலந்து சாப்பிடலாம்.

சமைக்காமல் ஒரு வேலை உணவாவது எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டிற்க்கு மிகவும் நல்லது. இல்லையென்றால் இங்கிருக்கும் வளங்கள் சுரண்டப்படும். பின்பு வாழமுடியாத பாலைவனமாக உருவெடுக்கலாம். யாரையும் எதிர்த்து போராட தெவையில்லை, முதலில் நம்மை எதிர்த்து போராட பழகவேண்டும். நம் மனதை செம்மை ஆக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடும் பொழுது முதலில் சக்தி உடலில் சேருகிறது, இரண்டாவது அதிகம் செலவு செய்ய தேவையில்லை அதனால் அதிகமாக உழைக்க அவசியமில்லை. நிம்மதியாக உயிர் வாழலாம். எரிவாய்வு பயன்படுத்தாமல் உண்டு பழக ஆரம்பித்தால் மண்ணென்னை போன்ற எரிவாய்வு இறக்குமதி செய்ய அவசியமில்லை, ஆதலால் வெளிநாட்டு நபர்களால் நம்மை கட்டுபடுத்த இயலாது. நமது வர்த்தகம் சிறப்பாக இருக்கும். நாம் இறக்குமதி செய்யாமல் ஏற்றுமதி செய்தால் நமது பணமதிப்பு கூடிகொண்டே இருக்கும். இப்பொழுது நம் பணமதிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. காரணம் நாம் ஏற்றுமதி செய்யும் பொருளின் மதிப்பு மிகவும் குறைவாகவும், இறக்குமதி செய்யும் மதிப்பு மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் நேரடியாக நம்மை கட்டுபடுத்துகின்றனர். நாம் செய்யும் எல்லா விசயத்திலும் வெளிநாட்டு நபர்களோ அல்லது நிறுவனமோ முடிவெடுக்கிறார்கள். இறக்குமதி ஏற்றுமதியில் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது போல் எண்ணம் எழுகிறது.

கல்வி நிறுவனங்களில் இது போன்ற பாடத்திட்டங்கள் செயல் படுத்த வேண்டும். மற்றும் பள்ளி / கல்லூரி மாணவ மாணவியருக்கு சிறுவயதிலிருந்து இயற்கை உணவை பழக்க படுத்த வேண்டும். ஏதோ ஒரு வகையில் அவர்களுடன் நினைவில் பதித்துகொண்டே இருக்கனும். இயற்கை உணவகங்களை ஏற்படுத்தி மலிவான விலையில் இயற்கை உணவுகளை அறிமுகம் செய்ய வேண்டும். மற்றும் அவ்வாறான உணவகங்களுக்கு சலுகைகள் கொடுத்து வரியை விலக்கு அளிக்க வேண்டும். சமைத்து கொடுக்கும் உணவகங்களுக்கு வரியை அதிகம் செய்தால் மாறிவிடும்.

சமைத்து சாப்பிடுகிற இன்ஸ்டண்ட் நூடூல்ஸ் போல சமைக்காமல் சாப்பிடும் முழு உணவுமுறைகள் ஏதாவது இருக்க என்று யோசித்து செயல்படுத்த வேண்டும்.

உணவு விசயத்தில் மற்றும் மாற்றம் வந்த போதாது! ஆன்மீகத்திலும் மாற்றம் தேவைபடுகிறது.

கோயிலுக்கு போகிறேன் என்று உங்களை ஏமாற்றி கொள்ளாதிர்கள், உண்மையை தேடுங்கள். பிராமனர்கள் தங்களுக்கு துரோகம் செய்கின்றனர். தாங்கள் அவர்களை மதித்து பூஜை நடத்த ஏற்பாடு செய்தால், அவர்கள் தேவையான விசயங்களை சொல்லாமல் ஏனோ சில புரியாத மொழிகளில் கற்று உளறுகிறார்கள். உண்மையை சொல்லப்போனால் பிராமனர்கள் தங்களுக்கு எப்படி பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கற்றுத்தரவேண்டும். அவர்கள் புரியாத மொழிகளில் சொல்லவே தங்களுடைய இனங்கள் அழிவை நோக்கி செல்கிறது. தமிழ்நாட்டிற்க்கு மிகப்பெரிய ஆபத்து இது.

தயவு செய்து நன்கு யோகா தெரிந்த நாகர்களை அல்லது வித்வான்களை அழைத்து பூஜையை மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி செய்யாவிட்டால் தாங்கள் பல மயக்கங்களுக்கு ஆட்பட்டு நரகத்தை நோக்கி செல்வீர்கள். ஒரு வேலை அப்படி கிடைக்கவில்லை என்றால் தங்கள் பெயரை அல்லது குல தெய்வ பெயரையோ அல்லது தங்களுக்கு பிடித்த தெய்வங்களையோ காலையிலும் மாலையிலும் அரை மணி நேரம் மனதிலோ அல்லது வாய்விட்டோ சொல்லிக்கொண்டிருங்கள். பூஜை செய்ய தொடங்குங்கள். பல தெய்வங்களை வணங்குவதற்க்கு பதில் ஒரு தெய்வத்தை வணங்குவது மிகவும் சிறப்பு. ஏனென்றால் பல தெய்வங்களை வணங்கும்பொழுது மனம் ஒடுக்கப்பெறாது. ஒரு தெய்வங்களை வணங்கும் பொழுது மனம் ஒடுங்கி அடுத்த நிலை கிடைத்துவிடும். பல கோயிலில் பார்க்கும் நாகங்கள் போன்று நமது உடம்பில் சக்தி உள்ளது. அது பல வருடப் பூஜை செய்தப்பிறகு வெளிப்படும். அதன் மூலம் பல அறிய தகவல்கள் தங்களுக்குள் இருந்து வெளிப்படும். அதன் மூலம் ஆன்மீகத்தில் தெளிவை அடையலாம். ஏதோ ஒன்று நம்மை வழிநடத்துகிறது என்பதை நேரடியாக உணரலாம். நாகர்கள் என்ற சொல்லுக்கு ஆன்மீகத்தில் முன்னெற்றம் அடைந்த ஒருவரை குறிக்கிறது.

நெற்றியில் இடும் திருநீறு, குங்குமம், மஞ்சள், கருப்பு சாந்து போன்ற விசயங்களுக்கும் நமக்கும் சிறப்பான காரணங்கள் உள்ளது. கோயிலில் பார்க்கும் சிலைகளுக்கு பல விதமான தத்துவங்கள் உள்ளது. எல்லாமே நம்மை பற்றித்தான் உள்ளது. அதை தெரியபடுத்தவே பிராமனர்களின் அல்லது பூசாரிகளின் வேலை. அவர்களுக்கும் அதை பற்றி தெரியாமல் பூஜை என்ற பெயரில் பல பொய்யான தகவலை சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

சரி பள்ளி / கல்லூரிகளில் ஆவது சொல்கிறார்களா என்றால் இல்லை என்று தான் பதில் வருகிறது. விசயம் என்னவேன்றால் யோகா அல்லது கடவுளை வணங்கும் முறை போன்ற கலையை சொல்லித்தராமல் மறைக்கப்படுகிறது. அப்படியே சொன்னாலும் தவறான பல தகவல்களை சொல்லி முட்டாலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் வியாபாரி பாபா ராம்தெவ் போன்று யோகா செய்தால் உடலும் மனமும் நல்லா இருக்கும் என்று ஊடகங்கள் பரப்புரை செய்யும் பொழுது இது சரி என்று நமக்கு தோன்றும் அளவுக்கு முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள். விளிப்புணர்வோட இருங்கள். சுடுகாடாக மாற்றினாலும் பரவாயில்லை, நம் குழந்தைகள் படித்து வெளிநாட்டிலாவது பிழைத்துகொள்வார்கள் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்து பள்ளி / கல்லூரிகளில் சேர்த்துவிடுகிறீர்கள். படித்து முடித்து வெளியே வந்தவுடன் வெளிச்சமில்லாமல் பயம் பற்றிக்கொள்கிறது. வெளிச்சத்துடன் வரவேண்டிய பிள்ளைகளை வெளிச்சமில்லாமல் மாற்றி கொண்டிருக்கிறது நமது கல்வி முறை. அடிமைகளை உருவாக்கியுள்ளனர். அப்படியே நன்றாக படித்து அறிவுள்ளவர்களை வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். அப்புறம் எப்படி தமிழ்நாடு உருப்படும்.

நமக்கு பல பொய்யான தகவல்களை சொல்லி நம் மனதை முடுக்கியுள்ளனர். அதில் முக்கியமாக வாஷ்து சாஷ்திரம் மற்றும் ஜோதிடம்.

வாஸ்துவிலும் உடலை பற்றித்தான் சொல்லப்படுகிறது என்று கேள்வியுற்றேன். வடக்கு என்பது தலைப்பகுதி, தெற்கு என்பது மல ஜலப்பகுதி. கிழக்கும் மேற்க்கும் வடக்கு பகுதியின் முன்னேற்றமாக சொல்லப்படுகிறது. நமது சக்தி தெற்கில் இருந்தால் மிருக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று செய்தியை படித்தேன். அதாவது பிறந்து உண்டு உயிர்களை உற்பத்தி செய்து இறப்பார்கள். கிழக்கு மேற்க்கில் வாசல் இருந்தால் மனிதர்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைகிறார்கள் என்று அர்தமாம். கிழக்கு பகுதி சூரியன்(சூடான அல்லது பிங்கலை) மூலம் சுவாசம் நடைபெறுகிறது, மேற்கு பகுதி சந்திரன்(குளிர்ந்த அல்லது இடக்கலை) வழியாக சுவாசம் நடைபெறுகிறது , வடக்கில் இருந்தால் ஞானம் பிறந்துவிட்டது என்று அர்த்தம்,. பிரமஸ்தானம் உயிர் இருக்கும் பகுதி. மற்றப்படி தேவையான காற்று, வெளிச்சத்தை வீட்டில் இருந்தால் சுகமாக இருக்கலாம். காற்று தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கும், பின்பு வடகிழக்கு பகுதியிலிருந்து தென்மேற்க்கும் மாறி நடக்கிறது, அதனால் ஜென்னல்களை சரியான பகுதியில் அதிகம் வைத்துக்கொண்டால் காற்று நன்கு சுழலும் என்றும் கேள்வியுற்றேன். தேவையான வெளிச்சத்தை வீட்டிற்க்கு வருமாறு ஏற்பாடு செய்தால் மிகவும் நல்லது. வீட்டின் மேல் பகுதி கூரை போன்று இருந்தால் சூரியக்கதிர்களின் வெப்பம் தாக்காது. கழிவு அறையின்(Septic Tank) மீது படுக்கக்கூடாது, படுத்தால் உடல் பாதிக்கும். ஒரு வீட்டின் தென்கிழக்கு பகுதியில் சமையலையும் வடமேற்கு பகுதியில் கழிவறையும் வைத்துவிட்டால் எல்லாம் நிம்மதி என்றால், இந்த வீட்டின் பின்புறம் இடது பக்கத்தில் வேறொருவர் வீட்டின் தென்கிழக்கில் சமையலறை வைத்துவிட்டால் நன்றாக இருக்குமோ! ஒருத்தர் சமையலறையில் சாப்பிடுவார், இன்னொருவர் கழிவு நீக்கம் செய்யும் பொழுது வீட்டில் முகம் சுளிக்கத்தான் செய்யும். என்ன வாஸ்து சொல்லப்படுகிறது! காலெண்டர்ல இருக்கிற அளவுல தான் வீடு இருக்கனும், மாற்றி கட்டினால் வீட்டிற்க்கு ஆகாதுனு சொல்றாங்க! அது ஏன் என்று கேள்வி கேட்கிறொமா? கேட்டால் பதில் சொல்லத்தெரியவில்லை.

பெரும்பாலும் ஜோதிடம் என்ற பெயரில் சொல்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமன பொருத்தங்கள் மற்றும் வருங்கால/ கடந்த கால வாழ்கையை பற்றி என்று தானே. ஜோதிடம் என்பது ஜோதி தெரிகிற இடம். முருகன் என்ற தெய்வத்துக்கு ஆறுவகையான ஜோதி உள்ளது. அது போன்று தெய்வம் விநாயகருக்கும் ஒலி உண்டு. சிவனுக்கும் ஜோதி உண்டு. இதை எப்படி கான்பது என்பது தான் ஜோதிடத்தின் முக்கிய பங்கு. ஆனால் அவர்கள் பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி அது உண்மை என்று நம்ப வைத்துள்ளனர். இது தான் உண்மை என்று சொன்னாலும் தங்கள் மனம் இப்பொழுது ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் ஜோதி தத்துவங்களுடன் கூடிய அனுபவம் வந்தால் தானே நம்புவீர்கள். பொய்யான தகவல் கொண்ட பல புத்தகங்களை வெளியிட்டு நம்மை முட்டாலாக மாற்றியுள்ளனர். இதனால் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் நடக்காமல் தள்ளிப்போகிறது. இதை எதிர்க்க வழி இல்லாமலும் விசலாமான பார்வை இல்லாமலும் நிம்மதில்லாமல் வாழ்கிறோம்.

என்று நிமிரும் நம் இனம்? கற்கும் இடங்களில் எல்லாம் சரியான தடங்கள் செய்தாலே நம் இனம் அழிந்து விடும் என்பது திட்டமா!

குழப்பமான சாதி மதத்தை ஏற்படுத்தி வரலாறு தெரியாமல் செய்து தங்களுக்குள் பிளவை ஏற்படுத்தி ஆளுமை செலுத்துகிறார்கள். மனுதர்ம சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினருக்காக மாற்றப்பட்டிருக்கிறது. சூத்திரன், வைஷ்னவன், சத்ரியன் மற்றும் பிராமனன் என நான்கு சாதி அமைப்பு நடைமுறையில் இருந்தன. சூத்திரன் என்பது கடவுளை வணங்க முயற்ச்சி எடுக்கும் நிலை, வைஷ்னவன் என்பது அகங்காரத்தை வென்று மனதை பற்றி அறிய முயற்ச்சி செய்யும் நிலை, சத்ரியன் என்பது மனதினை வெல்ல போராடும் நிலை, பிராமனன் என்பது கடவுளை அறிந்த நிலையில் உள்ளவன். பிராமனன் என்பது தனி மனித முயற்ச்சியால் மட்டுமே அடையமுடியும். யாருக்கும் தீட்சை கொடுக்க முடியாது, ஆனால் சொல்லிக்கொடுத்து முன்னேற்ற முடியும். பிராமனனை போன்று அனுபவம் உள்ளவர்களால் மற்றவர்களை வழிநடத்த இயலும்.

இந்த பிராமனன், சத்ரியன், வைஷ்னவன், சூத்திரன் என்பது பிறப்பால் வகுக்க படவில்லை. பிராமனனின் பிள்ளை பிராமனன் கிடையாது. அவன் சூத்திரனும் இல்லை. பிறக்கும் பொழுது அது உயிர் அவ்வளவு தான். எப்பொழுது ஒரு உயிர் கடவுளை தேட முயற்ச்சி எடுக்கிறதோ, அப்பொழுது அது சூத்திரன். படிப்படியாகத்தான் முன்னேற முடியும். அதுபோல சூத்திரனனின் பிள்ளை முயற்ச்சி செய்தால் பிராமனனாக முடியும் என்பதே உண்மை. ஆனால் இந்த உண்மையை மறைத்து பிறப்பால் பிராமனர்கள் உள்ளனர் என்ற மனுதர்மத்தை இயற்றி மக்களையும் முட்டாளாக்கி அவர்களும் அடையாமல் பாரத தேசம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒரு பொய் தான் பாரத தேசத்தில் உள்ளவர்களை மற்ற மதத்திற்க்கும், சாதிக்கும் இடையில் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த ஒரு சட்டத்தை சரியான முறையில் மாற்றி அமைப்பதன் மூலம் உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த நாடாக மாறிவிடும். ஒவ்வொரு தனிநபர் மனவளர்ச்சி அடையும் பொழுது தான் ஒரு கூட்டமோ அல்லது நாடோ வளர்ச்சி அடையும். ஆனால் இன்று ஆட்சி பொறுப்பில் பிராமனன் போல் நடித்து அறிவு விரிவு பெறாமல் வெளிநாட்டுக்காரன் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்கிறார்கள். இது பாரத தேசத்தின் அழிவுக்கான பாதை. முடிந்தால் சரியான சட்டங்களை இயற்றி தப்பித்துக்கொள்வோம்.

கடவுளை உணர்வதற்க்கு வழியிருந்தும் பள்ளி / கல்லூரிகளில் சொல்லித்தர முன்வருவதில்லை, கடந்த 50 வருடங்களில் மாற்றங்களை ஏற்படுத்திருந்தால் சாதி, மதம் இல்லன்னு இந்தியாவுல பேசியிருப்பாங்க! கடவுளை பற்றி பிராமனன் இல்லாதவர்கள் அறிந்தால் கொல்வதற்க்கு ஆள் அனுப்பும் என்று வீடியோ பதிவில் கேள்வியுற்றேன். மற்ற சாதிகாரர்களுக்கு இந்த இரகசியங்கள் தெரியக்கூடாதாம். ரசாயனத்தை கலந்த உணவுகளை உற்பத்தி செய்ய வைத்து மருத்துவர்களை உருவாக்கும் நாடு நம் நாடு. வீட்டில் இருப்பவரிடம் நேரம் சரியில்லை, தோசம் இருக்கு, பில்லி சூன்யம் ஏவல் வைத்துள்ளார்கள் என்று பயத்தை உற்பத்தி செய்து பூஜைக்கு வழி சொல்லும் நாடு நம் நாடு. அடிப்படை கல்வியை கற்றுக்கொடுத்தால் வியாபாரம் கெட்டுவிடும் என்று ஆடம்பர கல்வியை பழக்கப்படுத்தும் நாடு நம் நாடு. முட்டாளை உருவாக்கிவிட்டு ஆட்சியாளர்கள் சரியில்லை என்று புலம்பும் நாடு. எங்க யோசிக்க ஆரம்பித்தால் கேள்வி கேட்பான் என்று அடிமையை உருவாக்குகிறது. நல்ல வடிவமைப்பு. முற்றுபெறாத பிரச்சனைகளை உருவாக்கும் வடிவமைப்பு. ஆனால் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பொழுது இந்த வடிவமைப்பால் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தினாலும் பல வகையில் சுரண்டப்படுகிறது. இந்த வடிவமைப்பால் வெளிநாட்டு நபர்களால் சாதி மத சிக்கலை ஏற்படுத்தி மனிதனை யோசிக்கவிடாமல் செய்து சுலபமாக கொள்ளை அடிக்கமுடியும். எதற்க்காக இவ்வளவு நேரம் உழைக்கிறோம் என்று தெரியாது. ஒருபுறம் இலவசத்தை கொடுத்துவிட்டு மறுபுறத்தில் உழைப்பவனின் மீது மேலும் பாரத்தை சுமக்கவைக்கிறது.

அதிகமாக சாப்பிட்டுவிட்டு அடிவயிற்றில் வலி வருகிறது என்று சொல்பவனுக்கு எதற்க்கு இலவச மருத்துவம். கொடுக்ககூடாது, மிகப்பெரிய தவறு உள்ளது போல தெரிகிறது. இந்தியாவின் பொதுத்துறைக்காகவோ அல்லது மாநிலத்தின் பொதுத்துறைக்காகவோ உழைக்கிறார்களே அவர்களுக்கு கொடுக்கலாம் இலவச மருத்துவம். மற்றவர்களுக்கு எக்காரனம் கொண்டும் கொடுக்க கூடாது. தேவையில்லாத வகையில் தன் உடலை கெடுத்திக்கொண்டு காய்ச்சல், தலைவலி, இருமல், கேன்சர், எயிட்ஸ், உடல் வலி என்று சொல்பவர்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்ககூடாது. உடலின் மீது முதலில் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். பாம்பு, தேள், விஷ வாய்வு, இயற்கை சீற்றங்களால் பாதிப்பு, விபத்து போன்றவற்றிக்கு இலவச மருத்துவம் கொடுக்கலாம். எல்லோருக்கும் இலவச மருத்துவம் கொடுக்கும் பொழுது எப்படி வேனுமானாலும் வாழலாம், இலவச மருத்துவம் கொடுக்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இலவச மருத்துவத்தை கொடுத்தால் உடலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை வளராது. உடலை பாதுகாப்பதற்க்கு தேவையான கல்வி முறைகளை மருத்துவமுகாம் மூலம் வழங்கலாம். சாதரன சளி, இருமல், காய்ச்சல், தலைவலிக்கெல்லாம் மருத்துவம் பார்ப்பதற்க்கு பதில் ஒரு 25 நபர்கள் சேர்ந்த பிறகு ஹீலர் பாஸ்கர் போன்று மருத்துவ ஆலோசனை முகாம் வழங்கினால் சிறப்பாக இருக்கும். அவர்களே தன் உடல் பிரச்சனைகளை சரி செய்து கொள்வார்கள். இதனால் தேவையில்லாத கழிவுகளை உற்பத்தி செய்யும் மருத்துவ தொழிற்ச்சாலையை நம்ப வேண்டிய அவசியமில்லை. அரசாங்க மருத்தவமுறை ஆனாலும் பணம் வாங்கிக்கொண்டு மருத்துவம் கொடுத்தால் மிகப்பெரிய சிறப்பு இருக்கும். அப்பொழுது வருகிற பணத்தை கொண்டு வேலை செய்யும் நபர்களுக்கு கொடுக்கலாம், மருத்துவமனையை விரிவாக்கலாம், ஆராய்ச்சி தேவைக்காக பணத்தை ஒதுக்கலாம். இப்படி பட்ட சிந்தனையில் தவறு உள்ளதா! இலவசம் இலவசம் என்று சொல்லி கழிவுகளை உற்பத்தி செய்கிற நாடாக மாறிக்கொண்டே இருக்கிறது.

இலவசமாக கல்வி கொடுக்கிறேன், இலவசமாக பொருள் கொடுக்கிறேன், இலவசமாக மருத்துவம் கொடுக்கிறேன் என்று சொல்லி தமிழ்நாட்டில் நிதிநெருக்கடியை ஏற்படுத்திவிட்டு கடன் சுமை அதிகமாக இருக்கிறது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மக்கள் மீதும் நாற்பதாயிரம் கடன் இருக்கிறது என்று வெளியீடு வேற!. என்ன நடக்கிறது நம் நாட்டில். இலவசம் கொடுத்தால் உழைக்கிறவனை கேளி செய்வது போல் அல்லவா இருக்கிறது. பல நாட்கள் உழைத்து சேமித்த பணத்தை அதிவேகமாக செலவு செய்கிற வேலையை செய்கிறது இப்படிப்பட்ட இலவசம். ஆமாம் இலவசம் கொடுத்ததால் கஜான காலி, ஒவ்வொரு அத்தியாவசிய பொருளின் மீதும் விலையை கூட்டிவிட்டால் வாங்கும் போது சேமித்த பணத்தை செலவு செய்து தானே தீரும். இது மிகப்பெரிய கொடுர சிந்தனை என்று தான் சொல்ல வேண்டும். தேவையில்லாத கல்வி முறை, மருத்துவமுறை, புதிய கண்டுபிடிப்பு என்று மாயையை உருவாக்கி யோசிக்ககூடிய ஆற்றல் மிக்கவர்களை இத்துறையில் வேலைக்கு அமர்த்தி யோசிக்க முடியாமல் செய்து இங்கிருக்கும் இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பது என்பது தான் அரசியலா! என்னடா இது படித்தவன் எல்லாம் முட்டாள், பணம் பற்றாக்குறையில் இருக்கிறார்களே, படிக்காதவர்கள் அறிவாளி போல பணம் படைத்தவன் போல தெரிகிறார்களே என்று பல நாட்கள் கேள்வி எழுந்தது. பதில் இது தானா என்று சந்தேகம் வந்துவிட்டது.

அறிவில் உயர்ந்தவர்களை அல்லது யோசிக்க கூடிய ஆற்றல் மிக்கவர்களை தேர்ந்தெடுத்து தேவையில்லாத வகையில் சிந்திக்க தூண்டிவிட்டு(Information Technology) வேறெந்த துறையிலும் கவணம் செலுத்தவிடாமல் செய்து, குறைந்த அறிவு உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சி பொறுப்பில் அமர வைப்பதற்க்கு பணத்தை செலவு செய்கிறது சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் என்று எண்ணம் தோன்றுகிறது. அரசியல் பக்கம் வராத அளவுக்கு பார்த்து கொள்கிறது இந்த அமைப்புகள். ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அறிவில் குறைந்தவர்களை கொண்டு இங்கிருக்கும் வளங்களையும் நிலங்களையும் ஏமாற்றி சுரண்டுகிறார்கள். இவர்களை கொண்டு அடிமையான ஒரு சமுகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்புகளின் வேலை தவறான கல்விகளை பழக்கப்படுத்துதல், சாதி மதத்திற்க்கு இடையில் வன்முறையை தூண்டுதல், பாரம்பரிய கல்வி முறையை மழுங்கடித்தல், பாரம்பரிய உணவு முறையை மழுங்கடித்தல், பாரம்பரிய விளையாட்டுகள், விவசாயத்தை அழித்து குறிப்பிட்ட சில நபர்களுக்கு உதவும் வகையில் மாற்றி அமைப்பது போன்று பல நடக்கிறது. இதனால் பெரும் வருமானம் அவர்கள் கட்டுபாட்டில் செல்கிறது. ஊழல் நிறைந்த அதிகாரத்தில் நேர்மையாக உள்ளவர்களால் ஊழலை வேறருக்க முடியாமல் தத்தளிக்கிறது என்று சந்தேகம் வருகிறது.

ஏற்றுமதி இறக்குமதியை அரசாங்க அமைப்பு தான் செய்ய வேண்டும், மற்றவர்களிடம் ஒப்படைத்தால் பல பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கும். அரசாங்க அமைப்பு என்றால் வருமானத்தை பிரித்து பொது காரியங்களுக்கு பயன்படுத்துவார்கள், தனியார் அமைப்பு என்றால் அவ்வாறு இருக்காது. மற்ற நாட்டின் தேவையை முன்கூட்டிய கேட்டு அதற்க்கேட்டாவாறு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தால் நஷ்டம் ஆகாது, ஆனால் இருக்கிறதையெல்லாம் ஏற்றுமதி செய்யும் பொழுது அங்கு விலை குறைப்பு நடவடிக்கை இருக்கத்தான் செய்யும். தண்ணீர் பொதிந்துள்ள பொருளை அல்லது தண்ணீர் செலவு செய்து தயாரிக்ககூடிய பொருளை ஏற்றுமதி செய்யும் பொழுது தண்ணீரின் விலையை கூட்டி ஏற்றுமதி செய்யவும். இலவசமாகவா தண்ணீர் வருகிறது? நிலக்கறி மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது முறையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு நிலத்திற்க்கு வருகிறது. விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது இப்பொழுது. அதற்க்கு பதில் பொருளின் விலையை குறைக்கபடுகிறது. பொருளை உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவைப்பட்டது என்று ஆராய்ந்து லிட்டர்க்கு என்ன விலையோ அந்த விலையை நிர்நயம் செய்து ஏற்றுமதி செய்யவேண்டும். நிலத்தடி நீர் பெருகிய பிறகு நீரின் விலையை தவிர்க்கலாம்.

நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக பாரம்பரிய முறையில் காலங்களுக்கும் நிலங்களுக்கும் தகுந்தவாறு உணவு பயிர்களை உற்பத்தி செய்யுங்கள். முடிந்தளவு தண்ணீர் குறைவாக தேவைப்படும் உணவு முறையாகிய கம்பு, சோளம், வரகு, கொள்ளு, இராகி, தினை, சாமை, அவரை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயாறு, கொண்டைக்கடலை, எள் போன்ற உணவுப்பயிர்களை விளைந்து அதிலே உணவுகளை உண்ணுங்கள். பிரட், கோதுமை பொருட்களை சாப்பிடுவதை தவிறுங்கள். தண்ணீர் அதிகமாக தேவைப்படும் அரிசி உணவை சாப்பிட்டால் தான் பெருமை என்ற உணர்வை தவிற்ப்பது நலம். பஞ்சாப்பில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தும் இங்கிருந்தும் வேறொரு பொருளை ஏற்றுமதி செய்து தான் சாப்பிட முடியுமா! அப்படி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பொழுது மண் எண்ணை, வாகனத்தின் தேவை முதல் எல்லாமே அதிகமாகிறது. வியாபாரிகள் தங்கள் உணர்வுகளை தூண்டி தேவையானதை புகுத்தி விடுவார்கள். தாங்கள் எந்த பகுதியில் வசிக்கிறீர்களோ அந்த பகுதியில் என்ன விளைகிறதோ அதையே சமைத்து உண்ணுங்கள். போதுமான சக்தி நிறைந்த உணவு. மற்ற நிலத்திலிருந்து அதாவது மற்ற சூழ்நிலையிலிருந்து விளைந்த பொருளை உண்ணும் பொழுது பல வியாதி உண்டு செய்யும் என்பதை உறுதியாக சொல்கிறேன். தங்கள் கிராமத்தில் உணவுகளை பற்றி கலந்துரையாடுங்கள். பாசிப்பயாறை நிலத்தில் விளைந்து அதில் பாயாசம் செய்யாமல் நிலத்தில் விளையாத ஜவ்வரிசியில் செய்வது நல்லதா! சிந்தனை செய்யுங்கள் தோழர்களே! எப்பொழுதும் தண்ணீர் குறைவான உணவுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இயற்கை வளத்தை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.

தண்ணீரை சேமிக்கும் வன்னம் பகுதிக்கு தகுந்தவாறு விதைகளை நேர்த்தி செய்து விற்பதற்க்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அனுமதி கொடுத்தால் மிகவும் பயனளிக்கும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற விதையோ அல்லது மரபனு மாற்றுவிதையோ பயன்படுத்தக்கூடாது. அப்படி விதையை இறக்குமதி செய்யும் பொழுது உணவிற்க்கு கூடுதல் செலவும் அதிகமாகிறது மற்றும் விற்பதற்க்கான சந்தைகளும் அமைக்கமுடியாமல் போகிறது. விதையை உருவாக்கும் நிறுவனங்கள் தான் விதையிலிருந்து உற்பத்தியாகும் பொருளை விற்க முடியும்.

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளிக்கு தண்ணீர் நிறைந்த பொருளாகிய தக்காளி போன்று பல பொருள் ஏற்றுமதி அதிகமாக உள்ளது. இது மிகப்பெரிய வறட்சியை ஏற்படுத்தும். விளித்துக்கொள்ளுங்கள். காலம் மிக குறைவாக உள்ளது. பாலைவனமாக உருவெடுக்கும் முன் சிந்தித்து செயலாற்றுவது மிகவும் சிறந்தது.

கடவுள், தெய்வம் சம்பந்தமான விசயங்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தினால், தேவையில்லாத குழப்பங்கள் வருங்காலத்தில் நடைபெறாது. இதனால் சாதி, மதம் உடைந்து ஒற்றுமைக்கு வழி வகுக்கும். மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருப்பதால் ஒற்றுமை இல்லாமல் போனால் சண்டையிட்டு செத்து மடிவார்கள் என்று உறுதியாக சொல்கிறேன். கோயில், மசூதி, தேவாலையம் போன்ற கட்டிடங்களில் சிலை வடிவங்கள், தெய்வங்கள், கடவுளை பற்றி அறிவும் நிறைந்து இருப்பவர்களை தேர்வு செய்து மக்களை வழிநடத்தினால் மிகவும் நல்லது.

பெரியவர்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள், வயதானவர்களோ அல்லது பணக்காரர்களோ பெரியவர்கள் கிடையாது. வயதில் சிறியவானாலும் அறிவில் விரிந்து கிடப்பார்கள் அவர்களே பெரியோர்கள், சான்றோர்கள், சைவர்கள், பிராமனர்கள், ஆரியர்கள்.

வறட்சி வந்துவிட்டால் இந்நிலத்தில் வாழமுடியாத சூழலை ஏற்படுத்தலாம். அதற்க்கு முன்பாக விளிப்புனர்வுடன் நடப்பது மிகவும் பயந்தரகூடியதாக அமையும். இயற்கையான உணவுகள் ஏதேனும் இருப்பின் பதிவிடவும், மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். தங்கள் கருத்தும் வரவேற்க்கப்படுகிறது.

மேலே கூறப்பட்ட செய்திகளை/கருத்துகளை ஆழமாக சிந்தித்து தங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
-சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

2 thoughts to “தமிழ்நாட்டிற்க்கு தற்காப்பு அவசியம்”

  1. என்ன போராட்டம் பன்னினாலும் என்று கொடுத்துள்ளீர்கள். இது பண்ணினாலும் என்றிருக்க வேண்டும். முகப்பு பக்கத்தில் தேடுங்கல் என்றிருக்கிறது. இது தேடுங்கள் என மாற்ற வேண்டும். தமிழை சிறப்பாக கொண்டு செல்லும் தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. அதே சமயம் தவறுகள் இராமல் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *