திருவள்ளுவரின் திருக்குறள்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.



மனைவிக்கு அஞ்சுபவர் எல்லா வகையிலும் அஞ்சி நல்லார்கும் நல்லதைச் செய்ய மாட்டார்.



மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.



தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.



எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.


Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.


He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.



illaaLai anjuvaan anjumaR ReGnGnaandrum
nallaarkku nalla seyal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மனைவி மக்கள் மட்டுமே என வாழ்ந்தால் மான்பு மிகுந்தவராக முடியாது. மனைவியிடம் பணிவுடன் நடந்து நாணமற்று வாழலாம் மாறாக அவள் ஏவல் செய்யும்படி நடந்தால் நற்பெறு அடையமுடியாது. பெண்ணின் அழகிய நெற்றிக்கு திலகம் போல் ஒட்டிக்கொண்டு இருப்பவர் நண்பர்கள் மத்தியில் சிறப்பு அடையமாட்டார். பெண்ணுக்கு ஏவல் வேலை செய்பவரை பெண்ணே மதிப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.