திருவள்ளுவரின் திருக்குறள்

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.



எல்லாம் சிறக்க நினைக்கும் அன்பு, வாழ்தலின் எல்லைகளை புரிந்துக் கொள்ளும் அறிவு, எதை எப்படி செய்யவேண்டும் என்ற தேற்றம், நான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற அவாவின்மை இவை நான்கையும் நன்றாக அடைந்தவரே தெளிவுக்கு அடையாளம்.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நாடும் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை உண்டாகும். சேர்த்து வாரி அதிகரிக்க தெரிந்தவர் செய்வதே செயல். அன்பு, அறிவு, புரிதல், அவாயின்மை என நான்கும் உள்ளவரே தெளிவானவர். செயல்பட வாய்ப்பு இருந்தும் செயல்பட முடியாதவர்கள் பலர். செயல்பட தகுதியானவரை நாடி தகுந்த காலத்தில் செய்வதே சரி. தகுதியற்றவரை தேர்தெடுப்பதால் மரியாதை குறையும். தகுதியானவரை மதிப்புடன் நடத்துவதே ஆட்சியாளர்களின் கடமை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: