திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: உறுப்புநலனழிதல் / Wasting Away
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: