ஔவையாரின் கொன்றை வேந்தன்
| 1. | அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் |
| 2. | ஆலயம் தொழுவது சாலவும் நன்று |
| 3. | இல் அறம் அல்லது நல் அறம் அன்று |
| 4. | ஈயார் தேட்டை தீயார் கொள்வர் |
| 5. | உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு |
| 6. | ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் |
| 7. | எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் |
| 8. | ஏவா மக்கள் மூவா மருந்து |
| 9. | ஐயம் புகினும் செய்வன செய் |
| 10. | ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு |
| 11. | ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் |
| 12. | ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு |
| 13. | அஃகமும் காசும் சிக்கெனத் தேடு |
| 14. | கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை |
| 15. | காவல் தானே பாவையர்க்கு அழகு |
| 16. | கிட்டாதாயின் வெட்டென மற |
| 17. | கீழோர் ஆயினும் தாழ உரை |
| 18. | குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை |
| 19. | கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் |
| 20. | கெடுவது செய்யின் விடுவது கருமம் |
| 21. | கேட்டில் உறுதி கூட்டும் உடைமை |
| 22. | கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி |
| 23. | கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி |
| 24. | கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு |
| 25. | கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை |
| 26. | சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை |
| 27. | சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு |
| 28. | சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு |
| 29. | சீரைத் தேடின் ஏரைத் தேடு |
| 30. | சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் |
| 31. | சூதும் வாதும் வேதனை செய்யும் |
| 32. | செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும் |
| 33. | சேமம் புகினும் யாமத்து உறங்கு |
| 34. | சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் |
| 35. | சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் |
| 36. | சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் |
| 37. | தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை |
| 38. | தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை |
| 39. | திரை கடல் ஓடியும் திரவியம் தேடு |
| 40. | தீராக் கோபம் போராய் முடியும் |
| 41. | துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு |
| 42. | தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும் |
| 43. | தெய்வம் சீறின் கைதவம் மாளும் |
| 44. | தேடாது அழிக்கின் பாடாய் முடியும் |
| 45. | தையும் மாசியும் வையகத்து உறங்கு |
| 46. | தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது |
| 47. | தோழனோடும் ஏழைமை பேசேல் |
| 48. | நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் |
| 49. | நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை |
| 50. | நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை |
| 51. | நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு |
| 52. | நுண்ணிய கருமமும் எண்ணித்துணி |
| 53. | நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு |
| 54. | நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை |
| 55. | நேரா நோன்பு சீர் ஆகாது |
| 56. | நைபவர் எனினும் நொய்ய உரையேல் |
| 57. | நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் |
| 58. | நோன்பு என்பது கொன்று தின்னாமை |
| 59. | பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் |
| 60. | பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் |
| 61. | பிறன் மனை புகாமை அறம் எனத் தகும் |
| 62. | பீரம் பேணில் பாரம் தாங்கும் |
| 63. | புலையும் கொலையும் களவும் தவிர் |
| 64. | பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் |
| 65. | பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் |
| 66. | பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் |
| 67. | பையச் சென்றால் வையம் தாங்கும் |
| 68. | பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர் |
| 69. | போனகம் என்பது தான் உழந்து உண்டல் |
| 70. | மருந்தே ஆயினும் விருந்தோடு உண் |
| 71. | மாரி அல்லது காரியம் இல்லை |
| 72. | மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை |
| 73. | மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது |
| 74. | முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் |
| 75. | மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் |
| 76. | மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு |
| 77. | மேழிச் செல்வம் கோழை படாது |
| 78. | மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு |
| 79. | மொழிவது மறுக்கின் அழிவது கருமம் |
| 80. | மோனம் என்பது ஞான வரம்பு |
| 81. | வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் |
| 82. | வானம் சுருங்கில் தானம் சுருங்கும் |
| 83. | விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் |
| 84. | வீரன் கேண்மை கூர் அம்பாகும் |
| 85. | உரவோர் என்கை இரவாது இருத்தல் |
| 86. | ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு |
| 87. | வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை |
| 88. | வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை |
| 89. | வைகல் தோறும் தெய்வம் தொழு |
| 90. | ஒத்த இடத்து நித்திரை கொள் |
| 91. | ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் |
Meta Information:
ஔவையாரின் கொன்றை வேந்தன், Kondrai Vendan
ஔவையாரின் கொன்றை வேந்தன், Kondrai Vendan