திருவள்ளுவரின் திருக்குறள்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.



நற்பண்புகளைத் தனக்கெனக் கொள்கையாக ஏந்தியவர் சீறினால் அரசனும் முழுமை அடையாமல் அழிந்து கெடுவான்.



உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.



உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.



உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.


When blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame.


If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.



Endhiya koLkaiyaar seeRin idaimurindhu
vaendhanum vaendhu kedum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்ந்து காட்டும் வழிகாட்டிகளை இகழாமல் இருப்பதே போற்றுவதிலும் முதன்மையானது. கேட வேண்டும் என்றால் அவர்கள் சொல் கீழ்படியாமலும் அழிய வேண்டும் என்றால் என்றால் அவர்களை பழிப்பதும் போதுமானது. தீயில் கருகி பிழைக்கலாம் வழிகாட்டுபவர் பழிக்கு தப்ப முடியாது. வாழும் உயர்ந்தவர் சினத்தால் அரசனும், நல்லகுடி பிறந்தவரும், துறவியும் நற்கதி அடையமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.