திருவள்ளுவரின் திருக்குறள்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.



பகை என்ற பண்பில்லாததை ஒருவர் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.



பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.



பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.



பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.


For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.


The evil of hatred is not of a nature to be desired by one even in sport.



pakaiennum paNpi ladhanai oruvan
nakaiyaeyum vaendaRpaatru andru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பண்பற்ற பகை விரும்ப வேண்டாம். கொலைக் கருவி கொண்டவனின் பகைவிட சொல் கொண்டவன் பகை வலிமையானது. எல்லாரையும் பகைத்துக் கொள்பவனே ஏழை. பகைவரை நட்பாக கருதும் பண்பே முதன்மையானது. தெளிவற்றவன் நட்பு நல்லதல்ல. தன்னை காத்துக் கொள்ளவதும் பகையுணர்வை வளரவிடாமல் அழிப்பதும் அவசியமானது. குற்றம் செய்பவரின் செறுக்கை அழிக்காதவர் உண்மையாக வாழ்பவர் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.