திருவள்ளுவரின் திருக்குறள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.



உள்ளே இருந்து எதையும் செய்யவிடாமல் தடுக்கும் சோம்பல் முகமலர்ச்சியுடன் விருந்தை கவனிப்பவர்களை அணுகாது.



நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.



இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.



மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.


With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest


Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests



aganamarndhu seyyaaL URaiyum mukanamarndhu
nalvirundhu Ompuvaan il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

விவசாயத்தை தொழிலாக கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருத்தாக இருப்பினும் விருந்துடன் பகிர்ந்து கொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஆட்படமாட்டார். வேள்வியை விட சிறந்த விருந்தோம்பல் மென்மையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.