திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: மடியின்மை / Unsluggishness

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.



ஊக்கமின்மையை ஊக்கப்படுத்தாமல் கடைபிடிக்க வேண்டும் சிறந்த வாழ்வை சிறப்பான வாழ்வாக வாழ வேண்டுபவர்.



தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.



தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.



குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity.


Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.



matiyai matiyaa ozhukal kutiyaik
kutiyaaka vaeNdu pavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வளர்ச்சிக்கான வாழ்தல் சோர்வால் தடைபடும். சோர்வை சோர்வின்றி நிக்க வேண்டும் அப்படி செய்யாதவர் அறிவற்றவரே. அழுகை, மறதி, சோம்பல், தூக்கம் இதை விரும்புபவர் வளர்ச்சியை காண முடியாது. சோம்பல் அற்றவர் வாழ்வு மன்னன் வாழ்வு போல் இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.