திருவள்ளுவரின் திருக்குறள்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.



பெண்ணை விட பெறவேண்டிய ஒன்று எதுவும் இல்லை ,கற்பென்னும் திடத்தன்மை உண்டாக்க பெற்றால் .



இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.



கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.



கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.


If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain


What is more excellent than a wife, if she possess the stability of chastity ?



peNNin perundhakka yaavula kaRpennum
thiNmaiuN daagap peRin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்தல் என்பது உள்ளது சிறத்தல் ஆகும். அதற்கு துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம்பல கிடைத்துவிடும். ஆனால் நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டிய பொழுது வரும் மழைப் போன்றவள் மனைவி மேலும், தன்னைக் காத்து தன்னை சார்ந்தவரையும் காப்பவள் எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.