திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பொச்சாவாமை / Unforgetfulness

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.



மறதி புகழை அழிக்கும், அறிவு சார்ந்த செயலை தொடரும் துன்பம் அழிப்பதைப் போன்று.



நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.



நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.



நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.


Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!.


Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.



pochchaappuk kollum pukazhai aRivinai
nichcha nirappukkon Raangu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வெற்றியின் பெருமிதம் தரும் மறதி கோபத்தின் விளைவைவிட மோசமானதாக இருக்கும். மறதியற்ற தன்மையே அரன் போல் நம்மை காக்கும். இகழ்ந்து பேசி கேட்டவர்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நினைத்தபடி அடைவது எளிது நினைத்தபடியை நினைவு கூறும் ஆற்றல் இருந்தால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.